Election bannerElection banner
Published:Updated:

டுவிட்டர் அறிமுகம்: உலகளவில் 6வது இடத்தை பிடித்து ரஜினிகாந்த் சாதனை!

டுவிட்டர் அறிமுகம்: உலகளவில் 6வது இடத்தை பிடித்து ரஜினிகாந்த் சாதனை!
டுவிட்டர் அறிமுகம்: உலகளவில் 6வது இடத்தை பிடித்து ரஜினிகாந்த் சாதனை!

டுவிட்டர் அறிமுகம்: உலகளவில் 6வது இடத்தை பிடித்து ரஜினிகாந்த் சாதனை!

டுவிட்டர் அறிமுகம்: உலகளவில் 6வது இடத்தை பிடித்து ரஜினிகாந்த் சாதனை!

சென்னை: சமூகவலைத்தளமான டுவிட்டர் அறிமுகத்தில் உலகின் மிக பிரபலமானவர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 6வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான கோச்சடையான் வருகிற வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு உலகம்  அவரது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் 'லிங்கா' என்ற படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் டுவிட்டர் இணையதளத்தில் இணையப்போவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர், மாறி வரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்றாற் போலவும் இணையத்தில் உள்ள ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளவும், தனது கருத்துக்களை பரிமாறி கொள்ளவும் ஒரு தளம் தேவைப்படுகிறது" என்று கூறியிருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் தனது பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கினார் ரஜினிகாந்த். அவர் டுவிட்டரில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின்பற்ற தொடங்கினர். கணக்கை தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் ஒன்றேகால் லட்சம் பாலோவர்களை பெற்றார் ரஜினி. தற்போது வரை 3.15 லட்சம் பாலோவர்கள் இணைந்துள்ளனர்.

உலக அளவில் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் போப் சாதனையை ரஜினிகாந்த்தால் முறியடிக்க முடியவில்லை என்றாலும், டுவிட்டர் அறிமுக அளவில், உலகின் மிக பிரபலமானவர்களில் ரஜினிகாந்த் 6வது இடத்தில் உள்ளார்.

இந்திய அளவில் இன்றைய தேதி வரை நடிகர் அமீர்கான் டுவிட்டரில் அறிமுகமான முதல் நாள் 46 ஆயிரம் பாலோவர்களை பெற்றார். அமிதாப்பச்சன் 37,500 பாலோவர்களை பெற்றார். ஆனால் ரஜினிகாந்த்  இவர்களையெல்லாம் முறியடித்து உள்ளார். முதல் நாளிலேயே சுமார் ஒன்றேகால் லட்சம் பாலோவர்களை பெற்றார்.

அமிதாப்பச்சனுக்கு டுவிட்டரில் 8.61 மில்லியன் பாலோவர்களும், ஷாருகானுக்கு 7.51 மில்லியன் பாலோவர்களும், சல்மான் கானுக்கு 6.77 மில்லியன் பாலோவர்களும், அமீர்கானுக்கு 6.67 பாலோவர்களும், தீபிகா படுகோனேவுக்கு 5.98 மில்லியன் பாலோவர்களும், பிரியங்கா சோப்ராவுக்கு 5.86 மில்லியன் பாலோவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு