Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

• ஏ.ஆர்.ரஹ்மானின் 25 வருஷ நண்பர் பரத்பாலா. இவர்தான் ரஹ்மானின் 'வந்தே மாதரம்’ ஆல்பத்தைப் படமாக்கியவர். பரத் இப்போது இயக்கி வரும் 'மறியான்’ படத்துக்காக இசையமைத்து ஒரு மெலடிப் பாடலையும் பாடி இருக்கிறார் ரஹ்மான். பாலைவனப் புயலில் நடந்தபடி தனுஷ் பாடும் அந்தப் பாடலை, பிரமாண்டமாகப் படமாக்கி இருக்கிறாராம் பரத்பாலா.

• அஜித் காலில் அடிபட்டதால் விஷ்ணுவர்த்தன் படப்பிடிப்பில் தாமதம். கால்ஷீட் குளறுபடி காரணமாக அனுஷ்கா படத்தில் இருந்து விலகிவிட்டார். இப்போது, அஜித்துடன் டூயட் பாடப்போவது தமன்னா.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• 'யாருடா மகேஷ்’ படத்தில், 'ரத்னவேலுவை ரான்டினு கூப்பிட்டா குழந்தைவேலுவை .....னு கூப்பிடுவீங்களா?’ என்று ஒரு வசனம் இடம்பெற்று இருக்கிறதாம். இதற்காக, கேமராமேன் ரத்னவேல் ஆவேசமாகி ஒரு வழக்குப் போட்டு இருக்கிறாராம். 'குழந்தைவேலுன்னு பேர் இருக்குறவங்கதானே கோபிக்கணும்’ என்று, வழக்கை உடைக்கப் பார்க்கிறது படத் தரப்பு.

• 'சாமி’ படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ஹீரோவாக நடித்து, தயாரிக்கும் சஞ்சய் தத், தினமும் பகல் 12 மணிக்கு மேல்தான் படப்பிடிப்புக்கு வருகிறாராம். அதனால், சஞ்சய் தத் மாதிரியே டூப் ஒருவரை வைத்து லாங் ஷாட் காட்சிகளை முதலில் எடுக்கிறார் ரவிக்குமார்!

##~##