Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

• 'அட்டகத்தி’யில் லோக்கல் காதலை ரணகளப்படுத்திய டைரக்டர் ரஞ்சித், அதே சென்னை லாங்வேஜில் அடுத்த படத்தையும் இயக்குகிறார். கார்த்திதான் கதாநாயகன். ஞானவேல் தயாரிக்கும் அந்தப் படத்துக்கு 'பரம்பரை’ என்று டைட்டில்.

• 'நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்குக் கிடைத்த ஏடாகூட விமர் சனங்களைக் கண்டு நொந்துபோனார் கௌதம் வாசுதேவ் மேனன். 'தெலுங்குல படம் சூப்பராப் போகுது...’ என்று சமாளித்தவர் இப்போது, 'என்னோட அடுத்த படம் நிச்சயம் நல்ல படமா இருக்கும். நம்புங்க...’ என்று நாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• 'கோச்சடையான்’ ரிலீஸுக்குப் பிறகு தயாராகப் போகும் 'ராணா’வுக்காக ரொம்பவும் மெனெக் கெடுகிறாராம் ரஜினி. முழுக்க முழுக்க வில்லன் வேஷத்தில் வெளுத்துக்கட்டப் போகும் ரஜினிக்கு, படத்தில் மூன்று வேடங்கள். படத்தை இயக்கப் போவது கே.எஸ்.ரவிக்குமார்.

• அப்பா கார்த்திக்கின் வாடை பட்டுவிடக் கூடாது என்று மகன் கௌதமுக்கு அம்மா ராகினி அதிரடிக் கட்டளையே போட்டு இருக்கிறாராம். கௌதம் அடுத்து நடிக்கப் போகும் கதைகளையும் ராகினியே தேர்வு செய்கிறார். அம்மாவும் மகனும் தன்னைப் புறக்கணிப்பதைக் கண்டு கொள்ளாமல் ரசிக்கிறாராம் கார்த்திக்.

மிஸ்டர் மியாவ்
##~##