Published:Updated:

''நிஜமா நாங்க டூப் இல்ல!''

''நிஜமா நாங்க டூப் இல்ல!''

''நிஜமா நாங்க டூப் இல்ல!''

''நிஜமா நாங்க டூப் இல்ல!''

Published:Updated:

க்களுக்காக உயிரைக் கொடுப்பதாக சினிமாவில் ஹீரோக்கள் பஞ்ச் பேசினாலும், நிஜத்தில் உயிரைப் பணயம் வைக்கும் கலைஞர்கள் என்னவோ ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்கள்தான். கொஞ்சம் பலத்துடன் அவர்களுடன் கை குலுக்கிப் பேசியதில்...

சிவப்பிரகாஷ்

'' 'சந்திரமுகி’யில் காலைத் தூக்கியவாறு ரஜினி சார் அறிமுகமாகும் காட்சியிலும், 'பாபா’ பட சண்டைக் காட்சிகளிலும் டூப் போட்டேன். 'சிவகாசி’, 'திருப்பாச்சி’ போன்ற படங்களிலும் விஜய் சாருக்கு நான்தான் டூப். 'தம்’ படத்தில் சிம்புவுக்கு டூப் போட்டு ஆறாவது மாடியில இருந்து குதிச்சேன் சார். ஆனா, மறுநாள் பேப்பர்ல, சிம்புவே ரிஸ்க் எடுத்துக் குதிச்சதா நியூஸ் வந்துச்சு'' என்று சிரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நிஜமா நாங்க டூப் இல்ல!''

முருகானந்தம்

''16 வருஷமா ஃபீல்டுல இருக்கேன். ஹாலிவுட் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்னா ஏதோ தேவ லோகத்தில இருந்து வந்த வங்கனு நினைக்கிறாங்க. 30 அடி உயரத்தில் இருந்து குதிக் கணும்னா, ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் யாரும் வெறும் தரையில் குதிக்க மாட்டாங்க. ரப்பர் பெட் போட்டுக் குதிச்சு அதை சி.ஜி. எல்லாம் பண்ணி தரையில விழுந்த மாதிரி காண்பிப்பாங்க. ஆனா, இங்கே இப்பவும் நாங்க தரையில் அப்படியேதான் குதிக்கிறோம். இங்கே ரிஸ்க் அதிகம்'' என்கிறார் காட்டமாக.

''நிஜமா நாங்க டூப் இல்ல!''

வெங்கல் ராவ்

ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழ் நாட்டுக்கு வந்து பல வருடங்கள் ஆனாலும் நமீதாவின் அண்ணன் போலவே தமிழ் பேசுகிறார். '30 வருஷமா சினிமால இருக்குது சார் நானு. சைக்கிளுல போறேன் சார்...

''நிஜமா நாங்க டூப் இல்ல!''

சைக்கிளுல. என் ஒய்ஃப்பு, 'சென்னையில இத்தனை வருஷமா இருக்கோமே, ஒரு பீச் உண்டா, பார்க் உண்டா’னு கேட்டு த்தூனு துப்புறா சார். ஏதோ வடிவேலு சார் புண்ணியத்துல காமெடிப் பக்கம் வந்துட் டேன். ஆனா காமெடியில பெர்சும் இல்லே.. சிர்சும் இல்லே.. நடுவுலே சிக்கிட்டேன் சார்' என்கிறார் வருத்தத்துடன்.

கராத்தே சேகர்

''சூப்பர் சுப்பராயனிடம் 9 வருடங்களும் கனல் கண்ணனிடம் 10 வருடங்களும் அசிஸ்டென்ட்டாகப் பணியாற்றி இருக்கேன். 20-க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் சாருக்கு டூப். என் பையனும் என்னைப் பார்த்து ஆசைப்பட்டு யூனியன்ல சேர்ந்தான். ஆனா, சேர்ந்த ரெண்டே மாசத்தில இடது கண்ணுல அடிபட்டுப் போச்சு'' என்கிறார் விரக்தியாக.

சுரேஷ்

தொடக்கத்தில் 'இணைந்த கைகள்’, 'புலன் விசாரணை’ போன்ற படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக நடித்தவர், அர்ஜூன், மன்சூர் அலிகான் எனப் பலருக்கும் டூப் போட்டுள்ளார். ஒரு டி.வி. சீரியலில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சியில் டைவ் அடிக்கும்போது பின்னங்கழுத்தில் அடிபட்டு ஒரு மாதம் கோமாவில் இருந்துள்ளார். ஸ்டன்ட் தொழிலை விடும்படி மருத்துவர் எச்சரித்தபோதும் வேறு வேலை தெரியாததால் தொடர்ந்து ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்டாகவே நடித்து வரு கிறார்.  

சில ஆறுதல்கள்

சூர்யா ஒவ்வோர் ஆண்டும் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்களின் இன்ஷூரன்ஸுக்காக 2 லட்ச ரூபாய் தரு கிறார். மணிரத்னம் தன் படங்களில் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டுத்தான் நடிக்கவைக்கிறார். கமல் ஸ்டன்ட் காட்சிகள் எடுக்கும்போது, அருகில் கட்டாயம் ஒரு டாக்டர் இருப்பார். ஹாலிவுட் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் ஆட்களை அழைத்துவந்தாலும் தமிழ் ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட்களைப் படத்தில் உபயோகித்து புது வித்தைகளைக் கற்றுக்கொள்ள ஊக்குவிப்பாராம் கமல்.  

- தினேஷ் ராம்

படங்கள்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism