Published:Updated:

தெய்வத்திருமகள் - பாகம் இரண்டு?!

விகடன் விமர்சனக்குழு

ஜூலை 19,2011

தெய்வத்திருமகள் - பாகம் இரண்டு?!

விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சாரா நடித்த 'தெய்வத்திருமகள்' படம் தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இத்திரைப்பட குழுவினரும் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்குச்  சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். தற்போது இப்படக்குழு கோவையில் உள்ள திரையரங்கில் மக்களோடு அமர்ந்து படம் பார்த்து, அங்கு விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ##~~##

போகும் இடம் எல்லாம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த படக்குழுவினர்,  இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க யோசித்து வருகிறார்களாம்.

இதனை ஒரு திரையரங்கில் நடைபெற்ற காட்சியில் நடிகர் விக்ரமே  கூறியுள்ளார்.  "இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சாரா கொஞ்சம் வளர்ந்தவுடன் நடிக்க இருக்கிறாள்" என்று விக்ரம் தெரிவித்தார்.

அனுஷ்கா முதல் நாள் மட்டும் சென்னையில் விளம்பரப்படுத்தியவர் தற்போது ஹைதராபாத்தில் தெலுங்கு பதிப்பான 'நானா' படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார்.