Published:Updated:

சினிமாவுக்கு முழுக்கா? - நயன் தாரா விளக்கம்

விகடன் விமர்சனக்குழு

ஜூலை 19,2011

சினிமாவுக்கு முழுக்கா? - நயன் தாரா விளக்கம்

நயன்தாரா 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' கடைசி நாள் படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ##~~##

இக்காட்சியை பாத்தவர்கள் நயந்தாரா இனிமேல் நடிக்க மாட்டார். அவரது திரையுலக வாழ்வின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் தான் அழுது விட்டார் என்று கூறினார்கள்.

இந்நிலையில் தனது திரையுலக வாழ்க்கை குறித்து நயன்தாரா கூறியுள்ளது " நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக யார் சொன்னது. அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. ஸ்ரீராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு.

ஒரு பெண் மனவேதனையை தனது குடும்பத்தினரிடமோ, கணவரிடமோ அல்லது நண்பர்களிடமோ வெளிப்படுத்துவது உண்டு. ஆனால் ஸ்ரீராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் என்னையும் மீறி அது வெளிப்பட்டு விட்டது. என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன். படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள்.அதனால் அழுதேன்.

2010-ம் ஆண்டில் நான் நடித்த எல்லா படங்களும் வெற்றி. தெலுங்கில் சிம்ஹா, மலையாளத்தில் எலக்ட்ரா, தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன், கன்னடத்தில் சூப்பர் போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. " என்று கூறியுள்ளார்.

"ஸ்ரீராம ராஜ்ஜியம்' நயன்தாராவின் திரையுலக பயணத்தில் முற்றுப்புள்ளி இல்லையாம்.  இப்போது புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பது ஒரு சிறிய இடைவேளை தானாம்.