Published:Updated:

ஸ்ரேயாவுடன் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது: ஜீவா

ஸ்ரேயாவுடன் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது: ஜீவா

ஜூலை 19,2011

ஸ்ரேயாவுடன் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது: ஜீவா

ஜீவா, ஸ்ரேயா, கணேஷ் ஆச்சார்யா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'ரெளத்திரம்'. இப்படத்தினை புதுமுக இயக்குனர் கோகுல் இயக்கி இருக்கிறார். ஆர்.பி.செளத்ரி இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.##~~##

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (ஜுலை 18)ம் தேதி ஹோட்டல் க்ரீன் பார்க்கில் நடைபெற்றது. கே.எஸ்.ரவிக்குமார், வெற்றிமாறன், எஸ்.ஏ.சந்திரசேகர், ராசுமதுரவன், ஜனநாதன், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் பலர் கலந்து கொண்டு இசையை வெளியிட்டு வாழ்த்தினார்கள்.

'ரெளத்திரம்' படம் ஆக்ஷன் படமா என்று இயக்குனர் கோகுலிடம் கேட்ட போது அவர்  " தலைப்பில் இருக்கிறது ஆக்ஷன், ஆனால் படத்தில் அழகான குடும்பம், தெளிவான நட்பு, மென்மையான காதல், துரோகம் எல்லாம் இருக்கும். " என்றார்.

நடிகர் ஜீவா பேசும்போது " ரௌத்திரம் கதை அப்பாவுக்கும் எனக்கும் மிகவும் பிடித்தது. இயக்குனர் கோகுல் திடமான சிந்தனை உள்ளவர். எந்த குழப்பமும் இன்றி நினைத்த மாதிரி படத்தை இயக்கி இருக்கிறார். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. என் திரையுலக வாழ்க்கையில் இது வித்யாசமான படமாக இருக்கும்.

திரைப்படஙக்ளில் அறிமுக சீன்கள் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று நாயகர்கள்  விரும்புவது உண்டு. ஆனால் இந்த படத்தில் எனது அறிமுக காட்சி ரொம்ப சாதாரணமாக இருக்கும். 'ரௌத்திரம்' விறுவிறுப்பான கமர்ஷியல் படம்.

ஸ்ரேயா சிறப்பாக நடனம் ஆடுபவர். இந்த படத்தில் அவருக்கு மென்மையான வேடம். படத்தில் எனக்கும் அவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது." என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு