Published:Updated:

என்னவரை இன்னும் சந்திக்கவில்லை - த்ரிஷா

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஜூலை 20,2011

என்னவரை இன்னும் சந்திக்கவில்லை - த்ரிஷா

தமிழ் திரையுலகில் அடிக்கடி கிளம்பும் வதந்திகளில் ஒன்று த்ரிஷாவுக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்கிறார்கள் என்பது. தற்போது மீண்டும் அந்த வதந்தி பரவ ஆரம்பித்து இருக்கிறது.##~~##

கடந்த சில மாதங்களாகவே த்ரிஷாவின் அம்மா  ரகசியமாக மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்பட்டது. தொழில் அதிபர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள், டாக்டர்கள் என பல வரன்கள் பார்க்கப்பட்டதாகவும், இறுதியாக இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.

ஒருவர் அமெரிக்க மாப்பிள்ளை, அங்கு தொழில் அதிபராக இருக்கிறார். இன்னொருவர் உள்ளூர் மாப்பிள்ளை. இருவரில் த்ரிஷா யாரை தேர்வு செய்கிறாரோ அவருடன் திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது.

இந்த வதந்தி குறித்து த்ரிஷா " எனக்கு திருமணம் நடக்கப் போவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை. எனக்கு பொருத்தமானவரை எப்போது சந்திக்கிறேனோ, அப்போதுதான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக தெரிவிக்கிறேன் " என்று கூறியுள்ளார்.