Published:Updated:

சினிமால்!

சினிமால்!

சினிமால்!

சினிமால்!

Published:Updated:
சினிமால்!

குடும்பக் குத்துவிளக்காக நடித்த மோனிகா 'சிலந்தி’ படத்தில் ஹாட்டாக நடித்து, காட்டு, காட்டு என்று காட்டினார். இப்போது கன்னடத்தில் உருவாகும் 'கல்லா முல்லா பெல்லா’ என்ற படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சிக் காட்சிகளாம். பின்னே, எக்ஸ்ட்ரா சம்பளம் தந்து எக்கச்சக்கமாய் கவனித்தார்களாம். கடைக்கு வந்துதானே ஆகணும் கவர்ச்சிக் கத்திரிக்கா!

சினிமால்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வாலு’ படத்தில் ஒரு காமெடிக் காட்சியில் சிம்பு, சந்தானம், லொள்ளு சபா சேசு மூவரும் 'சத்யம்’ தியேட்டரில் ஹன்சிகாவுடன் படம் பார்க்க வருவதுபோல் காட்சி படமாக்கப்பட்டது. ஹன்சிகா அமர்ந்தவுடன் சிம்பு அமர வேண்டிய இடத்தில் காமெடி நடிகர் சேசு போய் உட்கார, ''டே தகரவாயா ஏன்டா உட்கார்ந்தே? இது நம்ப மன்மதன் உட்கார வேண்டிய சீட்டுடா'' என்று சந்தானம் சொல்ல, ''சீட் சும்மா இருந்துச்சுனு உட்கார்ந்தேன்'' என சேசு சொல்ல, ''ஏன் சுடுகாட்டிலே இடம் சும்மாதான் இருக்கு. அங்கே போய்ப் படுக்கலாம்ல?'' என்று சந்தானம் கலாய்க்க... யூனிட்டே விழுந்து விழுந்து சிரித்ததாம். ஹன்சிகா குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சிருப்பாரே?

சினிமால்!

'மச்சான்’ படத்தில் ஏக கிளாமரைக் காட்டியுள்ளார் ஷெரில்பின்டோ.  ''இந்தப் படத்துக்குப் பிறகு அடுத்த நமீதா நீதான்'' என்று சொல்லி இருக்கிறாராம் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். அதான் 'மச்சான்’னு டைட்டில் வெச்சீங்களோ?

சினிமால்!

வாரிசுகள் வரிசையாய் வரும் காலம் இது. அம்மா சாயலில் கும் என்று இருக்கும் ரூபிணியின் மகளை கோலிவுட்டுக்கு ஆட்டம் போட முன்னணி நாயகர் ஒருவர் பேசிவருகிறாராம். அம்சமா வந்தா, அமோகமா ஆதரவு தெரிவிப்போம்ல!

சினிமால்!

'வதம்’, '6’, 'கெஸ்ட்’ என மூன்று படங்களில் நடித்து வருகிறார் பூனம் கவுர். 'வதம்’ -  'களவாணி’ தயாரிப்பாளர் நசீரின் படம். '6’ - ஷாமுடன் நடிக்கும் படம். 'கெஸ்ட்’ படத்தில் 'சிந்து சமவெளி’யில் அமலா பாலுடன் நடித்த ஹரிஸ் உடன் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் பெட் ரூம் சீன்களில் பின்னியிருக்காம் பொண்னு. முன்னேற வேணாமா, பின்னே?

சினிமால்!
சினிமால்!

பஞ்சாபிப் பெண்ணான ரகுல் பிரீத்தி 'புத்தகம்’ படத்தில் ஆர்யா தம்பி சத்யாவுக்கு ஜோடியாக, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக நடித்துள்ளார். படத்தில் இவர்தான் புத்தகமாம். இவரை சத்யா உட்பட மூன்று இளைஞர்கள் காதல் அத்தியாயம் படிக்க ஆரம்பிக்க, அது எப்படி வில்லங்கம் ஆகிறது என்பதுதான் கதை. அப்போ, புரட்டிப் புரட்டிப் படிப்பீங்க!

சினிமால்!

பிரகாஷ் ராஜ் மலையாளத்தில் வெளியான 'சால்ட் அண்டு பெப்பர்’ என்ற படத்தைத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்கி நடிக்கிறார். மூன்று மொழிகளிலுமே தபு உண்டு. காரணம், போனிவர்மாவும், தபுவும் நெருங்கிய தோழிகள். ஓ, கதை அப்டி!

சினிமால்!
சினிமால்!

ஹன்சிகாவை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பூரி ஜெகன்னாத். பூரிக்கு போன் செய்து பிரபாஸை ஹீரோவாக வைத்து இயக்கும் புதிய படத்தில் வாய்ப்புக் கேட்டாராம் ஹன்சிகா. உடம்பைக் காரணம் காட்டி நோ சொல்லிவிட்டாராம் பூரி. அவரு மட்டும் பூரின்னு பேர் வெச்சுக்கலாம்... ஹன்சிகா மட்டும் உப்பக் கூடாதா?

சினிமால்!

'இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தை ரீமேக் செய்து கமல் வேடத்தில் சிம்புவையும், ரஜினி வேடத்தில் தனுஷையும் ஸ்ரீப்ரியா வேடத்தில் ஸ்ருதியையும் நடிக்கவைக்கலாம் என ஒரு மூத்த தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினாராம். தனுஷ்-சிம்பு இருவரும் அந்தப் பேச்சே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர் என்று ஒரு வதந்தி ஊஞ்சலாடுகிறது!

சினிமால்!
சினிமால்!

அமலாபால், நயன்தாரா, திரிஷா இவங்க எல்லாம் பாலிவுட் போகத் துடியாத் துடிக்கிறாங்க. ஆனா பாலிவுட்டையே கதிகலங்கவைத்த கவர்ச்சிக் கிளிகள் தீபிகா படுகோனா, பிரியங்கா சோப்ரா, சோனாக்ஸி சின்கா மூவரும் தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கலைக்கு மொழியில்லை... கவர்ச்சிக்கும்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism