Published:Updated:

"சீக்கிரம் சினிமாவுக்கு வருவேன்!"

க.நாகப்பன்படங்கள் : ஜி.வெங்கட்ராம்

"சீக்கிரம் சினிமாவுக்கு வருவேன்!"

க.நாகப்பன்படங்கள் : ஜி.வெங்கட்ராம்

Published:Updated:
##~##

ம்பர் 10... ஸ்குவாஷ் உலகத் தர வரிசையில் தீபிகா பல்லிகலின் இடம். எந்த இந்தியரும் இதுவரை எட்டியிராத உயரம். தனிப்பட்ட முறையில் மட்டும் அல்லாமல், இந்தியப் பெண்கள் அணியை ஒருங்கிணைத்து வெற்றிகளைக் குவித்து நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் தீபிகாவுக்கு அர்ஜுனா விருது வழங்கிக் கௌரவித்து இருக்கிறது இந்திய அரசாங்கம். பறந்து பறந்து பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் 'சாட்’ செய்ததில் இருந்து...  

 ''டாப் 10-ல இடம் பிடிச்சதுக்கு வாழ்த்துக்கள்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரொம்ப தேங்க்ஸ். விகடன் டாப் 10 மனிதர்கள் அங்கீகாரத்துக்கும்  தேங்க்ஸ். வாழ்த்துக்கள் குவியுது. 'நம்பர் ஒன் எப்போ?’னு கேட்கிறாங்க. 21 வயசுல இந்த இடத்துக்கு வந்தது... நிச்சயம் எனக்கே ஆச்சர்யம். அதே சமயம், உடனே முதல் இடத்தை இப்பவே எய்ம் பண்றது தப்பு. அப்படி ஆசைப்பட்டா காயங்களும் ஏமாற்றமும்தான் மிஞ்சும். ஏன்னா, விளையாட்டை எந்தப் பிரஷரும் இல்லாம அனுபவிச்சு விளையாடணும். 24-வது வயசுலதான் நம்பர் ஒன் ரேங்க்கிங் பத்தி யோசிக்கணும். அதுக்காக விளையாடணும். கிடைச்சா ரொம்ப சந்தோஷம்!''

"சீக்கிரம் சினிமாவுக்கு வருவேன்!"

''நீங்க ரொம்ப நாள் எதிர்பார்த்துட்டு இருந்த அர்ஜுனா விருதும் கிடைச்சிருச்சே...''

''எதிர்பார்த்தேன்னு சொல்ல முடியாது. ஆனா, தகுதி இருந்தும் கிடைக்கலையேனு ஆதங்கப்பட்டேன். அதே சமயம், யாரும் எனக்கு அர்ஜுனா தரக் கூடாதுனு எதிர்க்கலை. 'இந்தப் பொண்ணு இன்னும் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கட்டும்’னு நினைச்சு இருப்பாங்கபோல. யார் மேலயும் எனக்குக் கோபமோ, வருத்தமோ இல்லை. அதே மாதிரி விருது கிடைச்சதையும் பெரிசாக் கொண்டாடலை. இந்த அர்ஜுனா என் வெற்றியையும் உழைப்பையும் அங்கீகரிச்சு இருக்கு. இன்னும் இன்னும் நிறைய சாதிக்கணும்னு மோட்டிவேட் பண்ணியிருக்கு!''

''இந்த வருடத்தின் மறக்க முடியாத வெற்றி எது?''

''ஆசியன் டீம் சாம்பியன்ஷிப்ல இந்திய சீனியர் பெண்கள் அணி ஜெயிச்சது. ஃபைனல்ல எங்க ளுக்கு எதிரா சீனா. 'நிச்சயம் சீனாதான் ஜெயிக்கும்... இந்தியா இவ்ளோ தூரம் வந்ததே பெருசு’னு எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்க. மூணு போட்டிகள்ல ரெண்டுல ஜெயிக்கணும். முதல் போட்டியே நான் விளையாடணும். பதற்றமாஇருந்தது. மனசை ரிலாக்ஸ் பண்ணிட்டு, பாட்டு எல்லாம் கேட்டு ரெஃப்ரஷ்ஆகிட்டு விளையாடப்போனேன். 'அது ஃபைனல். ஜெயிச்சா, இந்தியாவுக்குப் பெரிய கௌரவம். தோத்துட்டா அடுத்து விளையாடுறவங்களுக்குக் கஷ்டம்...’ - இப்படி எந்தப் பிரச்னையையும் மனசுல ஏத்திக்காம விளையாடினேன். நேர் செட்ல ஜெயிச்சேன். அடுத்த போட்டியில் ரேங்க்கிங்கில் தன்னை விடப் பல இடங்கள் முன்னாடி இருந்த பிளேயரை ஜோஷ்னா தோற்கடிச் சுட்டாங்க. இந்தியப் பெண்கள் அணிக்கு அது பெரிய வெற்றி. நான் டீம் ஸ்பிரிட் வளர்த்து ஜெயிச்ச போட்டிங்கிறதால எனக்கு அது ரொம்ப ஸ்பெஷல். என் பயிற்சியாளர்கள் மேஜர் மணியம், சைரஸ் பூன்ச்சாவுக்கு நான் ரொம்பவே தேங்க்பண்ணணும்!''

''நடுவில் நிறையத் தோல்விகள், காயங்கள்... எப்படி மீண்டு வந்தீங்க?''

''தோல்வியோ, காயமோ மனசைப் பாதிக்காமப் பார்த்துக்கிட்டேன். என் இலக்கு பெருசு... என் கனவு பிரமாண்டமானது... அதைச் சாதிக்கும் திறமை என்கிட்ட இருக்குங்கிற நம்பிக்கையை நான் இழக்கவே இல்லை. அதுபோல ஸ்குவாஷ் மேல் இருக்கும் தீராக் காதல். கடுமையான பயிற்சி, கொஞ்சம் பொறுமை, நிறையக் காத்திருப்பு. நான் கடவுளை நம்புபவள். கடவுளே கஷ்டப்படுவார், அவமானப்படுவார். ஆனா, கடைசியில் அவர்தானே ஜெயிப்பார். அதே பாலிசிதான்!''

''ஜோஷ்னா, தீபிகானு ரோல் மாடல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதிக அளவில் பெண் ஸ்குவாஷ் சாம்பியன்கள் உருவாகவில்லையே?''

''இந்தியாவில் சீக்கிரமே பெண்களுக்குக் கல்யாணம் ஆகிடுது. இன்னொரு விஷயம், ஸ்குவாஷ் ரொம்ப காஸ்ட்லி கேம்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஆனா, அது அப்படி இல்லை. ஆர்வமும் பயிற்சியும் இருந்தா எந்தப் பெண்ணாலும் இந்த விளையாட்டில் சாதிக்க முடியும்!''  

''உங்க ரோல் மாடல் யார்?''

''சுவிஸ் டென்னிஸ் பிளேயர் ரோஜர் ஃபெடரர். டென்னிஸ்ல அவர் ரெக்கார்ட் பிரேக்கர். ஆனா, ஒவ்வொரு போட்டியையும் தன் முதல் போட்டியா நினைச்சு விளையாடுவார். புகழ் வெளிச்சத்தைக் கொஞ்சம்கூடத் தலையில் ஏத்திக்காம, நேத்து டென்னிஸ் விளை யாட வந்த பசங்க எப்படி எல்லாம் விளையாடுறாங்கனு பார்த்து, அதைத் தாண்டி தன் கேம் இருக்கணும்னு மெனக்கெடுவார். ஏழைகளுக்கு நிறைய உதவி செய்வார். அவரோட அந்த மனசுபோல எனக்கும் அமையணும்னு ஆசை!''

''எல்லாம் சரி... சினிமாவில் நடிக்க மாட்டேன்னு ஏன் அடம்பிடிக்கிறீங்க?''  

''இத்தனை வயசுல ரியல் லைஃப்ல காதலிக்கவே நேரம் இல்லை... இதுல சினிமா வேறயா? மாதவன், மோகன்லால் கூட நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஆனா, நடிக்கலை. சீக்கிரமே நடிக்கலாம். அதுவரை... ஸ்குவாஷ்... ஸ்குவாஷ்... ஸ்குவாஷ் மட்டுமே!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism