Published:Updated:

மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி!

மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி!
மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி!
மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் நடிகை மனோரமா அனுமதி!

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகையான நடிகை மனோரமா சிறந்த நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். 77 வயதான மனோரமாவுக்கு கடந்த மார்ச் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கடந்த 26ஆம் தேதி தனது 77வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிலையில், மீண்டும் அவருக்கு இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை மனோரமாவுக்கு டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவர் 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று  டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.