Published:Updated:

கங்கை அமரன் வீட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு!

கங்கை அமரன் வீட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு!
கங்கை அமரன் வீட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு!
கங்கை அமரன் வீட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு!

சென்னை: கங்கை அமரன் வீட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு செய்தனர்.

தமிழ் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் வீடு சென்னை அடையாறு, வெங்கடரத்தினம் நகரில் உள்ளது. அவரது வீட்டில் சிறுவர், சிறுமிகள் வீட்டு வேலைக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைப்புக்கு (சைல்டு ஹெல்ப் லைனுக்கு) புகார் வந்துள்ளது.

இதையடுத்து, குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்களும், போலீசாரும் நேற்று கங்கை அமரன் வீட்டுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு 2 சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, இந்த சிறுமிகளின் பெற்றோரின் அனுமதியுடன் அவர்களை வேலைக்கு வைத்துள்ளதாக வீட்டில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, அந்த சிறுமிகளின் பெற்றோரிடம் விசாரணை செய்வதற்காக கங்கை அமரன் வீட்டுக்கு குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள், போலீசார் இன்று மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.