Published:Updated:

எனது செல்வாக்கு சரியவில்லை : த்ரிஷா

எனது செல்வாக்கு சரியவில்லை : த்ரிஷா
எனது செல்வாக்கு சரியவில்லை : த்ரிஷா

ஜூலை 30,2011

எனது செல்வாக்கு சரியவில்லை : த்ரிஷா

த்ரிஷா நடிப்பில் தமிழில் வெளியாக இருக்கும் ஒரே படம் 'மங்காத்தா'. இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கிறது. ##~~##

'மங்காத்தா' படம் குறித்தும், தமிழ் சினிமாவில் தனது நிலை குறித்து த்ரிஷா கூறியது:

"அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துவிட்டேன். 'மங்காத்தா' எனக்கு அஜீத்துடன் மூன்றாவது படம். 'மங்காத்தா' ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். அப்பாவித்தனமான  ரோலில் வருகிறேன். படத்தில் அஜித்துக்கும் எனக்கும் காதல் இருக்கும். ரசிகர்களை கண்டிப்பாக 'மங்காத்தா' கவரும்.

'கட்டா மிட்டா' படத்திற்கு பிறகு சில இந்தி பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் நாயகிக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக் கொள்ளவில்லை.

மாதம் முழுவதும் எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நடிகைகள் சினிமாவில் இருப்பது கொஞ்ச காலம் தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.

ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரியவில்லை. நான் போட்டியாக யாரையும் நினைப்பது இல்லை.  10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.  பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகள் தான் எனக்கு போட்டியாக கருதுகிறேன். புதுமுகங்கள் யாரும் எனக்கு போட்டியில்லை, " என்றார் த்ரிஷா.