Published:Updated:

டாக்டர்கள் அறிவுரையால் எந்திரன் 2 ல் ரஜினி நடிப்பது சந்தேகம்!

விகடன் விமர்சனக்குழு
டாக்டர்கள் அறிவுரையால் எந்திரன் 2 ல் ரஜினி நடிப்பது சந்தேகம்!
டாக்டர்கள் அறிவுரையால் எந்திரன் 2 ல் ரஜினி நடிப்பது சந்தேகம்!
டாக்டர்கள் அறிவுரையால் எந்திரன் 2 ல் ரஜினி நடிப்பது சந்தேகம்!

சென்னை: உடலை வருத்திக் கொண்டு நடக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்திடம் டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளதால் அவர்,  எந்திரன் 2ஆம் பாகத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

உடல் நலக்குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்தார். அதன் பிறகு மகள் சவுந்தர்யா இயக்கிய 'கோச்சடையான்' அனிமேஷன் படத்தில் நடித்தார். அதன் பெரும் பகுதி படப்பிடிப்பு ஸ்டுடியோவிலேயே நடந்தது. கடினமாக அவரை நடிக்க வைக்க வில்லை.

தற்போது "லிங்கா" படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதிலும் கஷ்டமான காட்சிகளில் அவரை நடிக்க வைக்கவில்லை. பெரும்பாலும் சண்டை காட்சிகளில் டூப் நடிகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் லிங்கா படம் முடிந்ததும் எந்திரன் 2ஆம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் தயாராகி வருகிறார். இதற்கான கதையையும் அவர் தயார் செய்து விட்டார்.

சமீபத்தில் ’லிங்கா’ படப்பிடிப்பு நடந்த ஸ்டுடியோவுக்கு சென்று ரஜினிகாந்த்தை ஷங்கர் சந்தித்துள்ளார். அப்போது எந்திரன் 2ஆம் பாகத்தை எடுப்பது பற்றி அவர்கள் பேசியதாக தெரிகிறது. எந்திரன் 2ஆம் பாகத்தில் உடலை வருத்தி நடிக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அவரது உடல் நிலை தாங்காது என்கின்றனர்.

இதனிடையே, இந்த படத்தில் நடிப்பதற்கு ரஜினி சிகிச்சை அளித்த டாக்டர்கள் எதிர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஜினிகாந்த்தின் நெருக்கமானவர்கள் கூறும்போது," உடலை வருத்தி நடிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளனர். கோச்சடையான் அனிமேஷன் படம், ’லிங்கா’ படத்தையும் ரஜினியின் உடல் நிலைக்கு ஏற்றார் போலவே கே.எஸ்.ரவிக்குமார் எடுக்கிறார். ஆனால் எந்திரன் 2ஆம் பாகம் படத்தில் உடலை வருத்தி நடிக்க வேண்டியிருக்கும். எனவே அதில் நடிக்க வாய்ப்பு இல்லை" என்கின்றனர்.

ரஜினி மகள் சவுந்தர்யாவும், தந்தை உடல் நிலையில் அக்கறை காட்டுகிறார். கஷ்டப்பட்டு நடிக்க வேண்டாம் என்றும் தந்தையிடம் கூறியுள்ளார்.