ஸ்பெஷல்
Published:Updated:

சினிமால்

சினிமால்

சினிமால்

சிம்பு - பவர் ஸ்டார் - சந்தானம் மூவரும் இப்போது மிக நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். படப்பிடிப்பு இல்லாமல் போனால், மூவரும் நட்சத்திர ஓட்டலில் ஜாலியாகச் சந்தித்துக் கலாய்ப்பது வாடிக்கை ஆகிவிட்டது. அடுத்து சிம்பு - சந்தானம்- பவர் ஸ்டார் கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என்கிறார்கள். அப்போ மூணு லட்டு!

சினிமால்

'யான்’ படத்தின் பாடல் காட்சிக்காக மொராக்கோ நாட்டில் 30 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் துளசி. அதுக்கென்ன என்கிறீர்களா? கூட அம்மா ராதா துணை இல்லாமத் தனியாப் போயிருக்குப் பொண்ணு. எலே கீச்சான் வந்துச்சு, நம்ம துளசிப் பொண்ணும் வந்தாச்சு!

சினிமால்

இமான் அண்ணாச்சியின் கையில் இப்போது ஆறு படங்கள். அண்ணாச்சியின் ஒரு நாள் சம்பளம் 30,000. வெல்லுங்கண்ணே வெல்லுங்க!

சினிமால்
சினிமால்

'ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படத்தில் கார்த்தி கிராமத்து இளைஞராக நடிக்கிறார். காஜல் அகர்வால் ஜோடி சேரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 'பிரியாணி’ படத்துக்குப் பின் தொடங்குகிறது. இதிலேயும் சந்தானம் உண்டா? காமெடியோட கொஞ்சம் கதையையும் படத்தில் வைங்க!

சினிமால்

நடிகை இனியா கவர்ச்சி காட்டினால்தான் பிழைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். 'மாசானி’ படத்தில் ரவிக்கை அணியாமலும் 'கண் பேசும் வார்த்தைகள்’ படத்தில் நீச்சல் உடையிலும் நடிக்கிறாராம். இனிமேல் இனியா..?

சினிமால்

விஜயுடன் 'தலைவா’ படத்தில் நடிப் பதில் படு குஷியாக இருந்தார் அமலாபால். ஆனால், இப்போது படத்தில் மும்பை பிரபல நடிகை ஒருவரும் நடிக்க வருகிறார் என்று பேச்சு அடிபடுவதால், கொஞ்சம் டல்லாகிவிட்டார் அமலா. கலங்காதே கண்ணு!

சினிமால்
சினிமால்

சமந்தா தெலுங்கில் இப்போது முன்னணி நடிகை. ஆந்திராவில் மிகப் பெரிய கோடீஸ்வரர் பெல்லம் கொண்டா சுரேஷ். அவர் தன் மகனை அறிமுகப்படுத்தும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமந்தாவுக்குச் சம்பளமாக ஒரு புது வீடு வழங்கப்படவிருக்கிறது என்கிறார்கள். சமத்து சமந்தா!

சினிமால்

'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் 'காதலில் சொதப்புவது எப்படி’ குறும்படத்தில் அமலாபால் கேரக்டரில் ஹீரோயினாக நடித்தவர் ரெஜினா. 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அறிமுகமாகும் இவர் ஓர் உளவியல் மாணவி. சினிமாக்காரங்க மனசையெல்லாம் நல்லா படிச்சுவெச்சுக்கங்க!

சினிமால்

'ரேஸ்-2’ படத்தில் செம கவர்ச்சியில் கலக்கிய தீபிகா படுகோனேவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகளோடு கண்டனங்களும் சேர்ந்து வர... ''இனி பாருங்கள். ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸில் குடும்பப் பெண்ணாக, ராம்லீலா படத்தில் குஜராத்தி பாரம்பரியப் பெண்ணாக, 'யே ஜவானி ஹை தீவானி’ படத்தில் குத்து விளக்காகவும் ஜொலிப் பேன்'' என்கிறாராம். எங்க மனசைக் கருக்கா தீங்க தீபிகா!