Published:Updated:

பிரபல டிவி நடிகர் முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை!

 பிரபல டிவி நடிகர் முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை!
பிரபல டிவி நடிகர் முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை!
 பிரபல டிவி நடிகர் முரளிமோகன் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: பிரபல தொலைக்காட்சி நடிகர் பால முரளிமோகன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொலைக்காட்சி நடிகர்கள், நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி சீதா ராணி, மகன் உமா சங்கர் ஆகியோருடன் வசித்துவந்தார் முரளிமோகன். இவரது மகன் உமா சங்கர் தற்பொழுது அமெரிக்காவில் உள்ளார்.

இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக இருந்தபொழுது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது மனைவி வீடு திரும்பியதும், பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அப்பொழுது தனது கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து போலீஸார் விரைந்துவந்து முரளிமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்கொலைக்கு முன்னர் அது குறித்து முரளிமோகன் கடிதம் எதுவும் எழுதிவைத்தாரா என்பது குறித்து போலீஸார் தேடிய நிலையில், எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முரளிமோகன் ஷங்கரின் 'பாய்ஸ்', 'அள்ளித்தந்த வானம்', சுந்தர்.சி. இயக்கிய 'ரெண்டு' உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் 'வம்சம்' மற்றும் 'தென்றல்' உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்று மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் அவரை அப்போது குழந்தைகள் 'ஹார்லிக்ஸ் மாமா' என்று செல்லமாக அழைத்தார்கள்.