Published:Updated:

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

ரிட்டையர்மென்ட் வயதிலும் ஆக்டிவாக செயல்பட்டு பசங்களின் வாழ்க்கையில் ரிவிட் அடிக்கும் மூத்த இயக்குநர்களான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பாரதிராஜாவுக்கும் இடையேயான வித்தியாசங்கள்தான் இவை...!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பேனாவுக்குள் ரத்தத்தை மையாக ஊற்றி கட்டுரை எழுதும் ஜோல்னாப்பை நிரூபனைத் தன் படங் களில் காட்டிக் கலங்கடித்தவர்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

பாதி முகத்தைக் கையால் மூடி வெட்கப்படும் தமிழச்சி, காதலிக்கவிடாமல் சுற்றி நின்று ஆடும் தேவதைகள் ஆகியவற்றைத் தன் படங்களில் அறிமுகப்படுத்தியவர்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

மகனை எப்படியாவது முதல்வர் நாற்காலியில் உட்காரவைத்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவர். (அந்த கேப்பில் இவரது நாற்காலி பிடுங்கப்பட்டது) இவர் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து மகனை ஒருவழி பண்ணாமல் விட்டதற்காகவே, கோயில் கட்டிக் கும்பிடலாம்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

சி.எம்-மா வர்றது எல்லாம் இருக்கட்டும், முதல்ல மகனுக்கு நடிப்பு வரட்டும் என்று நினைக்கும் அன்புள்ள அப்பா. இதுவரை நடித்த படங்களில் எல்லாம் நடிப்பு என்ற பெயரில் திருப்பாச்சி அரிவாளைத் தீட்டி, பார்ப்பவர்கள் கழுத்தில் வைத்த மகன் மனோஜ், இப்போது நிஜமாகவே அப்பா இயக்கத்தில் வில்லனாம்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

தயாரிப்பாளர் சங்கத்தைப் பொறுத்தவரை எஸ்.ஏ.சி, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கைப்புள்ளைதான்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

இயக்குநர்கள் சங்கத்தில் இவருக்கும் இவர் சீடர்களுக்குமே எப்போதும் வாய்க்கா தகராறு!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

சின்ன வயதில் தன் பெற்றோரை அழித்த வில்லனை, வளர்ந்து பெரியவனாகிப் பழிவாங்கும் கதையை மட்டுமே பல வருடங்களாக எடுத்துப் பார்வையாளர்களைப் பழிவாங்கினாலும் இன்னும் கொலவெறி அடங்கவில்லை இவருக்கு!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

'என் இனிய தமிழ் மக்களே’ எனக் கரகரக் குரலில் பேசிக் கைகூப்பும் இந்தக் கிராமத்து ராஜா, திரைக்கு வெளியே பேசுவது எல்லாம் பாதி இங்கிலீபீஷ§தான்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

தன் படங்களில் ஜமுக்காளத்தைப் போர்த்திக்கொண்டு தத்துவக் குத்தாய் குத்தி எடுப்பார்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

இவருக்குள்ளும் நடிப்புத் தாகமுண்டு. ஆனால், கடைசி வரை அந்தத் தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்பதுதான் அக்வாஃபினா பரிதாபம்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

பிடித்த விலங்கு, அணில். சங்கவிக்கு சோப் போடுவது, யுவராணியோடு கபடி ஆடுவது என்று தொடக்கத்தில் கிளுகிளுப்பு விளையாட்டு கற்றுக்கொடுத்தவர், இப்போது அணில் எப்போதாவது அரியாசனம் அமரும் என்ற ஆசையில் இருப்பவர்!

அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!

பிடித்த உயிரினம், முன்பு மயிலு. இப்போதைக்கு, அன்னம்தான். பார்ப்போம் இதுவும் எத்தனை நாளைக்கென்று!

- ஆர்.சரண்