Published:Updated:

சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:
சினிமால்

26 வயதில் 26 படங்கள் நடித்துவிட்ட காஜல் அகர்வால், ''உயரமும் கண்களும்தான் எனக்கு ப்ளஸ்'' என்கிறார். உடன் நடிக்கும் நடிகர்களுடன்  தேவை இல்லாத கிசுகிசுக்களில் மாட்டிக்கொள்வது இல்லை. சாட் செய்வது, எஸ்.எம்.எஸ். தொல்லையும் இல்லையாம். காஜல் என்றால் அழகான கண்களுடையவள் என்று அர்த்தம். கண்களை மட்டுமா பார்க்கிறாங்க காஜல்!

சினிமால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்யா செம ஜாலியாக ஹைதராபாத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார். 'அதுக்கென்ன இப்போ’ங்கிறீங்களா? அவர் கொண்டாடியது ஹன்சிகா மோத்வானியுடன். அப்புறம் என்ன, ஜாலியாத்தானே இருக்கும்!

சினிமால்
சினிமால்

'அரவான்’ படத்தில் நடித்த அர்ச்சனா கவியை நினைவிருக்கிறதா? இப்போது தமிழில் 'ஞானக் கிறுக்கன்’, தெலுங்கில் 'பேக் பெஞ்ச் ஸ்டூடன்ட்’, மலையாளத்தில் 'ஹனி பீ’ படங்களில் நடிக்கிறார். வழக்கம்போல ''கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கத் தயார்'' என்கிறார் அர்ச்சனா கவி. அப்படி என்னதான் தேவை இருக்கோ?

சினிமால்

சீனாவில் உள்ள தெருக்களில் 'ஜிம்மி ஜிப்’ கொண்டு படமாக்க முடியாததால் 'ஐ’ படத்துக்காக, பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டுப் படமாக்கி வருகிறார் ஷங்கர். பிப்-15 தொடங்கி 20 நாட்களுக்குத் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. கிளைமாக்ஸ்ல மைக் நீட்டி மக்கள் கருத்து கேட்பீங்களா?

சினிமால்

உதயநிதியுடன் - நயன்தாரா நடிக்கும் 'இது கதிர்வேலனின் காதல்’ படத்தின் காமெடியை ரொம்பவே ரசித்த நயன்தாரா, தான் தமிழில் இப்படி ஒரு காமெடி படம் நடித்ததில்லை எனப் பாராட்டினாராம். இவர்களுடன் சந்தானம் - பரோட்டா சூரி கூட்டணி ஒருபுறம் அலப்பறை செய்கிறார்களாம். அப்போ படத்தில கதையே இருக்காதுன்னு சொல்லுங்க!

சினிமால்

பாலிவுட்டில் இருந்து டோலிவுட் வந்த மும்பை நடிகைகளிலேயே சோனாக்ஸி சின்ஹாதான் முதன்முதலாக 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கவே அவருக்கு இந்தச் சம்பளம். நல்லா வேலை வாங்கிட்டுத்தான் விடுவாய்ங்க!

சினிமால்
சினிமால்

அது என்னவோ தெரியவில்லை அஞ்சலி, சுந்தர். சி படம் என்றாலே எப்போதும் கொஞ்சம் தாராளம் காட்டுவார். 'ஆயுதம் செய்வோம்’ படத்தில் கண்ணாடி முன் நின்று ஒட்டுத்துணி இல்லாமல் முழு உடலைக் காட்டுவதுபோன்ற காட்சியில் நடித்தார். அடுத்து 'கலகலப்பு’ படத்தில் ஓவியாவுடன் காட்டு காட்டு என்று காட்டினார். இப்போது 'மதகஜராஜா’-விலும், விஷாலுக்கு காட்டோ காட்டு என்று காட்டுகிறாராம். சுந்தர். சி படத்தில் அஞ்சலி நடித்தாலே, அது ஹாட்டோ காட்டுதான்!

சினிமால்

'ஆட்டோகிராஃபி’ல் அறிமுகமாகி, பிறகு கல்யாணம் செய்து சினிமாவுக்கு டாட்டா காட்டிய கோபிகா திரும்பவும் வருகிறார். திருமணம் ஆனாலே நம்ம ஆளுங்களுக்கு ஆகாது. அதுவும் குழந்தை பெற்றுவிட்டால் சுத்தம். எனவே, அடுத்த இன்னிங்க்ஸை மலையாளத்திலேயே ஆரம்பிக்கிறார். நல்ல கதையும் வலுவான கேரக்டரும் இருந்தால்... என்ற அதே பல்லவியைத்தான் கோபிகாவும் பாடுகிறார்!

சினிமால்

'மங்காத்தா’ 'சமர்’ படங்களைத் தொடர்ந்து இப்போது தெலுங்கில் நடித்துவரும் 'ரம்’ படத்திலும் த்ரிஷாவுக்குக் குடிப்பதைப் போல் காட்சி உண்டாம். படத்துக்குப் பேரே ரம்முதானே, அப்புறம்...? ஆமா, இந்த அர்ஜூன் சம்பத் எங்கப்பா?

சினிமால்

'காதல்’ சந்தியாவுக்குத் தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார். ஆனால், தாய்மொழித் திரையுலகத்திலும் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. இப்போது 'யா யா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். என்ன கொடுமை சார் இது!

சினிமால்

காற்றினிலே வரும் கீதம் பாடி, குரலால் மயக்கிய எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கையை ராஜீவ் மேனன் படமாக இயக்க உள்ளார். இதில் எம்.எஸ் வேடத்தில் நடிக்கப்போகிறவர் வித்யாபாலன். 'அது எப்படி சிலுக்கு கேரக்டரில் நடித்தவர் எம்.எஸ் வேடத்தில் நடிக்கலாம்?’ என்று எதிர்ப்பு கிளப்ப ஒரு குரூப் தயாராகிறதாம். இவய்ங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!

சினிமால்

அஜித் பொதுவாக சினிமா விழாக் களில் கலந்துகொள்வது இல்லை. அஜித்தின் தீவிர ரசிகரான சிம்புவும் இனிமேல் சினிமா விழாக்களில் கலந்துகொள்வது இல்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம். மொதல்ல, ரெண்டு பேரும் நல்ல படமாத்தான் நடிப்போம்னும் முடிவெடுங்கப்பா!