Published:Updated:

பவர் ஸ்டார் இன் டைட்டானிக்!

பவர் ஸ்டார் இன் டைட்டானிக்!

பவர் ஸ்டார் இன் டைட்டானிக்!

பவர் ஸ்டார் இன் டைட்டானிக்!

Published:Updated:

ரீ-மேக்கின் தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்கவும் தமிழ்த் திரை உலகை உலக அளவில் உயர்த்தவும் தமிழகத்தின் பவர் ஸ்டார், ஹாலிவுட் படமான 'டைட்டானிக்’கை தமிழில் ரீ-மேக் செய்தால் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.

'டைட்டானிக்’கில் பவர் ஸ்டாரே ஜாக்காக நடிக்க முடிவு செய்கிறார்.  தலைப்பு தமிழில் இருக்க வேண்டும் என்பதால் 'காதல் கப்பலோட்டி’ என்று முடிவுசெய்துள்ளார் பவர் ஸ்டார்.

" 'டைட்டானிக்’ல அஞ்சு சாங்க் ஏழு ஃபைட் வெச்சிருக்கோம். சாங்ஸ் பட்டையைக் கிளப்புது. நீங்க இதுவரைக்கும் பார்க்காத புது பவர் ஸ்டாரை இந்தப் படத்துல பார்க்கப் போறீங்க. ஹீரோயின், தீபிகா படுகோனேக்கா...  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பவர் ஸ்டார் இன் டைட்டானிக்!

தல அஜித் ஒரு சின்ன ரோலில் படத்தின் தொடக்கத்தில் என்னுடன் மங்காத்தா ஆடித் தோற்கிறார். ஜெயிச்ச சந்தோஷத்தில் ஒரு அறிமுகப் பாட்டு. 'கரன்ட் இல்லா தமிழா, உன் கண்ணீர் நான் துடைப்பேன்’னு வைக்கிறோம். பாட்டுப் பாடி பயங்கரமா டான்ஸ் ஆடறதால, கப்பலை மிஸ் பண்ணிடுறேன். விடுவேனா? ஓடும் கப்பலில் ரன்னிங்ல ஏறுறேன்.

கப்பலோட கேப்டனா விஜயகாந்த் நடிக்கிறார். கப்பல்ல எம்.ஜி.ஆர். சாங்தான் போடணும்னு நான் கேப்டன் கிட்ட சொல்லப் போறதுக்கு முன்னாடி, தீபிகா படுகோனேவும் எனக்கு முன்னாடிப் போய்ச் சொல்லிடுறாங்க. அப்போ எனக்கும் ஹீரோயினுக்கும் ஒரே டேஸ்ட்னு தெரியுது. யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டா, அவங்க மேல எனக்கு லவ் வருது. அங்கே 'பவர் ஸ்டாரின் இதயமேனு’ ஹீரோயினை நினைச்சு ஒரு சாங் வெச்சிருக்கோம்.

ஹீரோயினோட மாமாவாக காதல் இளவரசன் சாம் ஆண்டர்சன், தமிழ் சினிமா உலகில்

பவர் ஸ்டார் இன் டைட்டானிக்!

முதல்முறையாக வில்லன் கேரக்டர்ல நடிக்கிறார். ஹீரோயினோட செல்ல நாய்க்குட்டி தண்ணியில விழ, அதை நான் காப்பாத்துறேன். அப்புறம் ரெண்டு பேருக்கும் லவ் சாங். 'ஜானி ஜானி லவ் பாபா’.

வில்லன் சாம் கப்பல்ல கஞ்சா கடத்துற விஷயம் தெரிய வர, தீபிகா படுகோனேவின் நாய் உதவியோட நான் அதைக் கண்டுபிடிக்கிறேன். சாமை கவர்மென்ட்ல பிடிச்சுக் குடுக்க எல்லா ஆதாரத்தையும் சேர்த்துவைக்க, ஹீரோயினைக் கடத்தி என்னை மிரட்டுறார் ஆண்டர்சன். தீபிகாவைக் காப்பாத்துறதுக்காக, எந்த ஆயுதமும் இல்லாம நிராயுதபாணியாச் சந்திக்கப்போற என்னை அடிக்கிறாரு. என்னை மூணு வாட்டி அடிச்சு ரத்தம் வந்த பிறகு ஒரு பஞ்ச் டயலாக் சொல்றேன். 'மூணு தடவை அடிச்சா வரும் ரத்தம். இந்த பவர் தொடங்கிட்டான்டா யுத்தம்’ அப்புறம் வில்லன் கேங்கை அடிச்சு நொறுக்குறேன்.

கடைசியா சாமையும் அவனோட அடியாளும் மட்டும்தான் மிஞ்சி இருக்காங்க. ரெண்டு பேரையும் கொல்லலாம்னு பார்த்தா துப்பாக்கியில ஒரே ஒரு தோட்டாதான் இருக்குது. தோட்டாவை என் பல்லால கடிச்சு ரெண்டு துண்டாக்கி ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல சுடுறேன்.

எல்லாரும் சந்தோஷமா இருக்குற நேரம் பார்த்து, எதிர்பாராதவிதமா சுனாமி வந்து கப்பலைக் கவுக்கப்பாக்குது. கொஞ்சம் கொஞ்சமா கப்பல் கடலுக்குள்ள மூழ்கும்போது நான் 30 நிமிஷம் மூச்சை அடக்கி நங்கூரத்தைக் கண்டுபிடிச்சு அதை என் வயித்துல கட்டுறேன். அப்படியே ஸ்விம்மிங் பண்ணிக் கரையில கொண்டுவந்து எல்லா மக்களையும் காப்பாத்துறேன். கடைசியில் சிம்பு கெஸ்ட் ரோலில் சும்மா வந்து ஹீரோயினையும் என்னையும் சேர்த்து வைக்கிறாரு.

'ஆனந்தத் தொல்லை’ படம் 'கோச்சடையானு’க்குப் போட்டியா ரிலீஸ் ஆகிறதால, ரஜினி அடுத்து நடிக்கிற படம் எப்போ ரிலீஸ் ஆகுமோ, அப்போ 'காதல் கப்பலோட்டி’ படத்தை ரிலீஸ் பண்ணப்போறேன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவதார் தமிழ் ரீ-மேக் பண்ணலாம்னு இருக்கேன்!''

- ரா.ராபின் மார்லர்