Published:Updated:

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

Published:Updated:
எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

அர்ஜூன் எப்போதும் 'ஏன்டடே’ என்ற வார்த்தையைத் தவறாமல் உதிர்த்துவிட்டுத்தான் வில்லனைத் திட்டவே ஆரம்பிப்பார். இரண்டு கைகளையும் 70 டிகிரியில் தூக்கிக்கொண்டு கற்பனையில் கோட்டினை உதறி மாட்டுவதுபோல உடலை குலுக்கி ரிலாக்ஸ் செய்துகொண்டு ஃபைட்டுக்குத் தயாராவார்.

ஸ்கூல் படிக்கும்போது, காலை இழுத்து இழுத்து ஓடும் விளையாட்டு ஓட்டத்தை இப்போதும் கடைப்பிடிக்கிறார் ரஜினி. ரஜினிபோல யார் ஓடினாலும் சிரிப்பார்கள் என்பதே அவரின் தனிச் சிறப்பு. வெட்கப்படும்போது பெண்கள்போல விரலைக் கடித்துக்கொண்டே 'சீப் போங்க’ என்பதும் ரஜினியின் தனி வழித்தன்மை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

பிரபு பாடல் காட்சிகளில் கொனட்டி கொனட்டி நளினமாக ஆடுவார். லேடீஸ் ஸ்டெப் என்றால் சாருக்கு அவ்ளோ இஷ்டம். சந்தேகம்னா 'அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’ பாட்டையும் 'அந்தியிலே வானம்...’ பாட்டையும் கம்பேர் பண்ணிப் பாருங்க. கிட்டத்தட்ட பல படங்களில் அதே ஸ்டெப்களைப் போட்டுத்தான் பெண் குலத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறார் பிரபு!

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

தலையை ஆட்டியபடியே கைகளை இடுப்பில் முட்டுக் கொடுத்துக் கால்களை விரித்து நீட்டியபடி நடப்பது என்றால் சிவாஜிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. பாடல் காட்சிகளில் புருவத்தையும் ஒரு கேரக்டராக்கி ஆடவிடுவார். கன்னங்களும்கூட நடித்து 'வாவ்’ சொல்லவைக்கும். முழுப் பாடலிலும் முப்பரிமாணம் காட்டி இருக்கும் பாடல் வேண்டுமா? வளைந்து குனிந்து முகத்தை மறைக்க முயற்சித்தபடி உடலைக் குறுக்கி வட்டமிட்டபடியே அவர் ஆடும் சிவ(£ஜி)தாண்டவம் 'எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி’ என்ற 'புதிய பறவை’ படப் பாடலைப் பாருங்க!

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

வி.கே ராமசாமி எப்போதும் கல்யாண விருந்து சாப்பிட்ட பிறகு வரும் ஒருவித டயர்ட்னெஸுடன்தான் டயலாக் டெலிவரி செய்வார். தொப்பையைத் தள்ளிக்கொண்டு காலை விரித்தபடி மெதுவாக நடப்பார். 'திரிசூலம்’ ஆகட்டும் 'ஆண்பாவம்’ ஆகட்டும் ஸேம் பின்ச் நடிப்பு. 'படவா ராஸ்கோலு’வை உலகத் தர வார்த்தையாக்கியவர்!

நிஜ வாழ்க்கையில் நல்லவரான நம்பியார் சினிமாவில் மட்டும் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு திருட்டு முழியோடு இல்லாதக் கஞ்சாவை கையால் கசக்குவார். அதிகம் கசக்கினால், கொலை பாதக சதித்திட்டம் தீட்டப்போகிறார் என்று அர்த்தமாக்கும்!

பாரிச வாயு எப்போதும் பாய்ந்தாற்போல சிரித்த முகத்தோடுதான் படங்களில் வருவார் அசோகன். சென்டிமென்ட் சீன்களில்கூட சிரித்த முகத்தோடு அழுவார். 'அன்பே வா’ நண்பனாகட்டும்... 'அலாவுதீனும் அற்புத விளக்கும்’ பூதமாகட்டும்... 'என் நண்பன்ன்ன்ன்ன் நீ ஜே...ப்ப்பீ!’ என்றும் 'ஆலம்பனா நா££ன் உங்கள்ள்ள்ள் அட்ட்டிமை!’ என்றும் நீ...ட்...டி முழக்கி ஸ்ட்ரெச் கொடுத்து டயலாக் டெலிவரி செய்வது அசோகன் ஸ்டைல்!

எத்தனை வருஷமாப் பார்த்திருக்கோம்!

கேப்டனுக்கு ஃபைட் சீனில் எப்பவும் ஒரே பாடி லாங்குவேஜ்தான். சுவற்றைக் கண்டால் நாய்க்குட்டி போல காலைத் தூக்கிவிடுவார். அதை சப்போர்ட்டாக்கி எதிரியின் நெஞ்சில் இன்னொரு காலால் மிதித்துவிட்டு தலை முடி வியர்வைத் துளியை சிதறவிடுவார். காதல் காட்சியில் பெண் போல நளின நடை நடப்பார். 'ஆங்...’ என்று கொனட்டி கொத்தமல்லியாகி செமக்காதல் சட்னி கொடுப்பார்!  

இவ்வளவு சொல்லிட்டு வாத்தியார் பத்திச் சொல்லாட்டி எப்படி? எம்.ஜி.ஆரின் தாயோ, தங்கையோ, காதலியோ, மனைவியோ கண்ணீர் சிந்துவதைப் பொறுக்கமாட்டார். கண்ணீரே சிந்தாமல் சோகமாகச் சும்மா நின்றுகொண்டு இருந்தாலும் பக்கத்தில் போய், வராத கண்ணீரைத் துடைப்பதுடன் அதை விரலாலேயே சுண்டியும் விடுவார். நடிக்கும்போது எம்.ஜி. ஆருக்கு இருக்கும் ஒரே பிரச்னை, கைகளை எங்கே வைத்துக்கொள்வது என்றுதான். அதனாலேயே கைகளைப் பின்னாலே கட்டிக் கொள்வார், வானத்தை நோக்கி மேலே காட்டு வார், பூமியை நோக்கிக் கீழே காட்டுவார். மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொள் வார். ஒன்றுமே செய்ய முடியவில்லையா, பக்கத் தில் ஹீரோயின் நிற்கிறாரா? அவரின் தோள் பட்டையைப் பிடித்து உலுக்கிடுவார்ல உலுக்கி!

-ஆர்.சரண்