Published:Updated:

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

Published:Updated:

'விஸ்வரூபம்’ படம் ரிலீஸ் ஆகிவிட்டாலும் பிரச்னைகளின் விஸ்வரூபம் ஓய்ந்தபாடில்லை. 'கடல்’ படத்தில் கிறிஸ்துவர்களை அவமதித்திருக்கிறார்கள் , 'சிங்கம் 2’ படத்தில் முஸ்லீம்களை அவமதித்திருக்கிறார்கள், 'ஆண்டவ பெருமாள்’ டைட்டில் இந்துக்களை இழிவு படுத்துகிறது என்று றெக்கை கட்டிப் பறக்கின்றன ஏராளமான பிரச்னைகள். ஒருவேளை முதலில் இருந்தே இந்தப் பிரச்னைகள் ஆரம்பித்திருந்தால் எந்தெந்தப் படங்களுக்கெல் லாம், யார் யாரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்திருக்கும்? அப்போதைய பரபரப்புச் செய்திகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்?

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

'முகமூடி’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

புரூஸ்லீ, ஜெட் லீ போன்ற லெஜன்ட்ஸ் கற்ற கலையான, குங்ஃபூ கலைஞர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக 'முகமூடி’ படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக மாநில குங்ஃபூ சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 'எங்கள் கலைஞர்கள் தாங்கள் கற்ற கலையை சமூக விரோதச் செயல்களுக்கும் திருட்டுச் செயல்களுக்கும் பயன்படுத்துவதாக மிஷ்கின் சித்தரித்துள்ள காட்சிகளை உடனடியாக வெட்ட வேண்டும். எங்கள் கலைஞர்கள் அனைவரும் ஓசி டிக்கெட்டில் படம் பார்த்த பின்னரே, படத்தை வெளியிட வேண்டும் எனவும், படத் தயாரிப்புக் குழுவே இன்டர்வெல் பாப்கார்ன் செலவையும், வந்து போவதற்கான ஆட்டோ காசையும் தர வேண்டும்’ எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மிஷ்கின் பதில் : ''குங்ஃபூ கலைஞர்கள் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள். 'ஆற்றின் போக்கில்தான் இலை போகுமே தவிர, அது கரையில் காத்திருக்காது’ என்று ஜென் தத்துவ ஞானி ஜீ-லீ-வா-யுங் சொன்னதுதான் இந்தப் படத்தின் அடிப்படையான செய்தி'' என்று தெரிவித்துள்ள மிஷ்கின், 'குறிப்பிட்ட ஒரு ஸ்கூலில் படிக்கும் கலைஞர்களை மட்டுமே அவ்வாறு சித்தரித்து உள்ளதாகவும் இதில் அவர்கள் கற்ற கலையை அவமதிக்கவில்லை’ எனவும் கூறினார். இதற்கிடையில் 'மாலை நேரங்களில் நடக்கும் இலக்கிய விழாக்களிலும் சினிமா விழாக்களிலும்கூட மிஷ்கின் கூலிங்கிளாஸ் போட்டு மேடையில் அமர்ந்திருப்பது கூலிங்கிளாஸ் தொழிலையே அவமதிப்பதாக இருப்பதாகவும் இதற்காகப் போராட் டம் நடத்தலாமா என்று ஆலோசிப்பதற்காகச் சங்கத்தின் பொதுக் குழு விரைவில் கூட இருக்கிறது’ என்றும் கூலிங்கிளாஸ் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதைப் படித்தபிறகு மிஷ்கின் மைண்ட் வாய்ஸ் : ''ஒருவேளை இப்படிப் போராட்டம் பண்ணி இருந்தாலாவதும் பப்ளிசிட்டியில படம் ஓடி இருக்குமோ?''

'சுந்தரபாண்டியன்’

''கூடப் பழகும் நண்பர்களையே துரோகிகளாகக் காட்டுவது சசிகுமார் அண்ட் கோவுக்கு வேலையாகப் போச்சு. இதனால், கூடப் பழகும் நண்பர்களைச் சந்தேகப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆகவே, நண்பர்களை வில்லன்களாகச் சித்தரிக்கும் 'சுந்தர பாண்டியன்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும்’ எனவும் 'அந்தப் படத்தில் நண்பர்களே துரோகி என சித்தரிக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும்’ எனவும் 'நடுக்கமில்லா நண்பர்கள் நலச் சங்கத்தினர்’  போராட்டத்தில் குதித்துள்ளனர்.

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

சசிகுமார் பதில்: '' 'குத்துனது நண்பனா இருந்தாலும் வெளிய சொல்லக் கூடாதுடா’  போன்ற வசனங்கள் நட்பின் மேன்மையை உயர்த்தவே செய்யும். இந்தப் படத்துடன் க்ளைமாக்ஸ் காட்சியில் பொட்டல் காட்டில் துரோகி நண்பனுக்கு அட்வைஸ் செய்வதை நிறுத்திக்கொள்கிறேன்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ள சசிகுமார், ''தமிழ் சினிமா தோன்றிய காலத்தில் இருந்து நட்பையும் நண்பர்களையும் பற்றி அதிகமான வசனம் பேசிய நான் எப்படி நண்பர்களை இழிவுபடுத்துவேன்'' என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகுமார்  மைண்ட் வாய்ஸ் : ''அப்படி படம் எடுத்தாதான்டா  ஓடுது! மூடிட்டுப் போங்கடா நொன்னைங்களா!''

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

'மயக்கம் என்ன’ மற்றும் '3’

தன்னுடைய தயாரிப்பான பீர் பாட்டில்களை ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்த இரண்டு திரைப்படங்களிலும் அந்தக் காட்சியை நீக்குமாறு கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா அவரது பணியாளர்களுடன் போராட்டக் களத்தில் குதித்துள்ளார். இதனால், தனது தயாரிப்புகளை

''தப்பிச்சுட்டோம்னு நினைச்சீங்களா?''

வாங்கிப் பயன்படுத்துவோர் அதனை வன்முறை ஆயுதமாக மாற்றக்கூடும் என்பதால், அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தனுஷ் பதில்  : ''விஜய் மல்லையா முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹீரோ சைக்கோ என்பதனால்தான் பாட்டிலால் மண்டையை உடைக்கிறான். மற்றபடி, சாதாரணமாக  மற்றவர்கள் அதனை ரசித்து ருசித்து குடிக்கும்படியும் காட்சிகள் வைத்து இருக்கிறோம். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு விளம்பரமே. எனவே உடனே தடையை நீக்க வேண்டும்!''

தனுஷ் மைண்ட்  வாய்ஸ் : ''நான்  நடிக்கிற படம் எல்லாம் முக்கால்வாசி சைக்கோ படம். சைக்கோ படம்னா பீர் பாட்டிலால் மண்டைய உடைக்கிற மாதிரி காட்சிகள் வைக்கணும்கிறது எங்க அண்ணன் ஆர்டர். பாட்டிலைத் தூக்குன படம்தான் கொஞ்சமாச்சும் ஓடுது. அரிவாளைத் தூக்குற படங்க எல்லாம் நாலு நாள் தாண்ட மாட்டேங்குது!''.

பின்குறிப்பு: ''மற்றவர்கள் பீரை ரசித்து ருசித்து குடிக்கும்படியும் காட்சிகள் வைத்து இருக்கிறோம். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு விளம்பரமே!'' என்று தனுஷ் தெரிவித்ததை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறது!

- மோ.கிஷோர் குமார்