அவங்க அவங்கதான்... இவங்க இவங்கதான்!
தமிழ் சினிமா காமெடி டைம் லைனில் தங்களுக்கென ஸ்பெஷல் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் வடிவேலுவுக்கும் சந்தானத்திற்கும் இடையேயான வித்தியாசங்கள் இவை...

பேஸ்மென்ட்டும் பில்டிங்கும் அரசியலில் வீக் என்றாலும், உடல்மொழியிலும் காமெடியிலும் படு ஸ்ட்ராங். தன்னைத்தானே கிண்டல் செய்து இதயங்களில் இடம் பிடித்து எக்கச்சக்கமாய்க் காசு அள்ளியவர்!

கவுண்டமணியின் 2.0 வெர்ஷன் இவர். ரைமிங் டைமிங் என இரட்டைப் பாதையில் காமெடி வண்டியைக் கவனமாய் ஓட்டுபவர்!


'வந்துட்டான்யா வந்துட்டான்’, 'மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு’, 'இப்பவே கண்ணக் கட்டுதே’ வசனங்களை இவர் ஒருமுறை உச்சரித்தால், தமிழர்கள் தினமும் பலமுறை உச்சரிக்கிறார்கள். இவருடைய வசனங்கள் பல ட்விட்டர் ஃபேஸ்புக்குகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது!

இவரது அப்பாடக்கரும் நண்பேன்டாவும் செம ஃபேமஸ்தான். ஆனால் வடிவேலுவோடு ஒப்பிட்டால், அவர்தான் கரெக்ட்டு கரெக்ட்டு, மிரட்டு மிரட்டு!

அரசியலில் ஆழம் பார்த்து அடிபட்டதால் 'பீ கேர்ஃபுல்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார்!

'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ இனிப்பு வெற்றியைத் தந்தாலும், பூந்தியை என்கிட்டே இருந்து திருடிட்டாங்க என்று முருங்கைக்காய்க்காரர் முறுக்கிக்கொண்டு கோர்ட் படி ஏறி இருப்பதால், சந்தானத்துக்குக் கொஞ்சம் சிக்கல்தான்!

தேர்தலில் வாய்ஸ் கொடுத்து வாயைப் புண்ணாக்கிக்கொண்டதால், கைப்புள்ளைக்குக் கட்டம் சரி இல்லாமல் போனது!

கைப்புள்ளைக்குச் சரியில்லாமல் போன கட்டத்திலேயே 'ரைட்டா... ரைட்டு’ என்று காமெடி பாண்டி ஆடி வருகிறார் பார்த்தா!

ரஜினிகாந்த் போன்ற ஹீரோக்களுக்கே சித்தப்பு, மாமா உறவுமுறையில்தான் படங்களில் வருவார். படு யூத்தாக வந்த படம் அநேகமாக 'காதலன்’, 'மிஸ்டர் ரோமியா’வுமாகத்தான் இருக்கும்.

ஒன்ஸ் அப்பான் எ டைம் சின்னிஜெயந்த் போல இப்போதைய யூத் ஹீரோக்களுக்கு இவர்தான் காலேஜ்மேட். சுமார் யூத் ஹீரோக்களின் படங்களுக்கு எலெக்ட்ரிக் எனர்ஜி ஏற்றும் ஆல் இன் ஆல் அப்பாடக்கர் இவர்!

ஹீரோவாக முதல் படம் 'இம்சை அரசனில்’ தாரை, தப்பட்டைகள் கிழித்துத் தொங்கவிட்டார். இரண்டாவது படம் 'இந்திரலோகத்தில் அழகப்பன்’ கந்தரகோலம் ஆனது!

இரண்டு ஹீரோக்களில் ஒருவராக முதல் படம் 'அறை எண் 305’ அறைந்து சாத்தியது. மூன்று ஹீரோக்களில் ஒருவராக 'லட்டு’... அடை... தே...ன்ன்ன்ன் அடைதான்!
- ஆர்.சரண், சீலன்