Published:Updated:

சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:
சினிமால்

80-களில் ஜிதேந்திரா - ஸ்ரீதேவி நடிக்க சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'ஹிம்மத்வாலா' படத்தின் ரீ-மேக்கில் இப்போது அஜய்தேவ்கனும் தமன்னாவும் நடிக்கிறார்கள். 'ஸ்ரீதேவி அணிந்து நடித்த காஸ்ட்யூம் போலவே தனக்கும் வேண்டும்’ என அடம் பிடித்தாராம் தமன்னா. என்ன இருந்தாலும் எங்கூரு மயிலு மாதிரி வருமா?

சினிமால்

ஷங்கர் 'ஐ’ படத்தின் பாடல் காட்சிகளுக்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரண்மனைகள், கோட்டை எனத் தேடித் தேடி 'நீதானே என் நிம்மதி’ என்ற பாடலைப் படமாக்கி உள்ளார். தாஜ்மகாலுக்கு மஞ்சக் கலர்ல பெயின்ட் அடிக்கலையே?

சினிமால்
சினிமால்

நாசரை பாலிவுட்டில் பேசவைத்த பெருமை மணிரத்னத்தின் 'பாம்பே’ படத்தையே சேரும். அதற்குப் பின் மிகக் குறைவான இந்திப் படங்களிலேயே நடித்த நாசர், இப்போது ரூபேஷ் பால் இயக்கத்தில் 'காமசூத்ரா 3-டி’ படத்தில் மன்னராக நடிக்கிறார். ஷெர்லின் சோப்ரா ஸ்டில் எதுவும் கிடைச் சுதா?

சினிமால்

சார்மி பாலிவுட்டில் பலமாக அஸ்திவாரம் போடுகிறார். இப்போது அவர் பிடியில் விவேக் ஓபராய், சஞ்சய் தத் எனப் பெரிய புள்ளிகள் மாட்டியுள்ளார்களாம். 'ஒல்லிப்பிச்சான் நடிகைகளையே பார்த்து ரசித்த இந்தி ரசிகர்களுக்கு சார்மி ஒரு மாறுதலாக இருப்பார்’ என்பது ஆந்திர கோங்குராவின் நம்பிக்கை. அப்போ இலியானாவுக்கு என்ன நம்பிக்கை?

சினிமால்

தெலுங்கில் 'ரம்’ படத்தில் த்ரிஷாவுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உண்டாம். ''உடம்பு ஸ்லிம்மாக இருப்பதால், சண்டைக் காட்சியில ஈஸியா நடிக்கிறீங்க'' என்று ஸ்டன்ட் மாஸ்டர் பாராட்ட, செம உற்சாகம் ஆகிவிட்டாராம் த்ரிஷா. ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் போட்டுப் போட்டுப் பார்த்து வருகிறாராம்.  சரக்கு அடிக்கிற மாதிரி நடிக்கிறதுக்கு என்ன படங்கள் பார்ப்பாராம்?

சினிமால்
சினிமால்

'மங்காத்தா’வில் நரை முடி ஹிட் ஆனதால் ஒரு பாடலுக்காவது நரை முடியோடு நடிங்க என சென்டிமென்ட் வேண்டுகோள்கள் அஜித்திடம் வைக்கப்படுகின்றனவாம். தலயைப் பாருங்கப்பா, முடியைப் பார்க்காதீங்க!

சினிமால்

பாரதிராஜா 'பதினாறு வயதினிலே’ படம் டிஜிட்டலில் தயாராகி உள்ளதைப் பார்க்க தன் சிஷ்யர் பாக்யராஜோடு பிரசாத் லேபுக்கு வந்திருந்தார். ''இன்றைய அறிமுக இயக்குநர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?'' என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ''என் முதல் படத்தில் வலுவான கதை இருந்தாலும் அறிமுகமில்லாத நடிகர், நடிகைகளை நடிக்கவைப்பதைவிட அறிமுகமானவர்களை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கமல், ரஜினி, ஸ்ரீதேவியை நடிக்கவைத்தேன். இன்றைய இளம் இயக்குநர்களும் அதைப் புரிந்துகொண்டால் சரி'' என்றார். ரைட்டு!

சினிமால்

விஜய் சேதுபதிக்கு 2017 வரை கால்ஷீட் டைரி நிரம்பிவிட்டதாம். அதனால், நல்ல கதையோடு வரும் இயக்குநர்களுக்குத் தன் கூத்துப்பட்டறை சகாக்களைப் பரிந்துரை செய்கிறார். நண்பேன்டா!

சினிமால்

அனுஷ்கா தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் முதலீடு செய்வது ரியல் எஸ்டேட்டில்தான். பேஸ்மென்டை ஸ்ட்ராங்காப் போடுங்க!

சினிமால்

தனுஷின் கொலவெறி பாட்டு செம ஹிட் ஆனதும், சிம்புவும் ஒரு ஆல்பம் வெளியிட்டார். இப்போது 'எதிர் நீச்சல்’ படத்தில் தனுஷ் 'சரக்கடிச்சா தப்பில்லே’ என்று பாட 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிம்பு, யுவனுடன் சேர்ந்து 'ஒரு பொறம்போக்கு’ என்ற பாடலைப் பாடி யுள்ளார். ரெண்டு பேரும் ஒரே தத்துவப் பாட்டால்ல பாடுவாக!