Published:Updated:

இதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா?

இதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா?

இதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா?

இதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா?

Published:Updated:

''ஹாரிஸ் ஜெயராஜ் முன்ன மாதிரி இல்லை''னு என் ஃப்ரெண்ட்கிட்ட சொன்னா, அவன் 'ஆமா கொஞ்சம் குண்டடிச்சுட்டார்’னு பல்பு குடுக்குறான். 'ஏன்டா இப்படி மொக்கை போடுறே?’னு கேட்டா 'இப்பல்லாம் அவரோட மியூஸிக் பத்தி ஃபேஸ்புக்கு, ப்ளாக்குனு கிழிகிழின்னு கிழிக்கிறாங்க’னு சொன்னான். 'என்னய்யா பண்ணினார் என் கட்சிக்காரர்’னு கேட்டேன், நான் ஹாரிஸ் வெறியன் என்பதால்!

சிஸ்டத்தை ஓப்பன் பண்ணி அவர் பாடல்கள் எங்கெங்கு சுடப்பட்டன என்று இணையத்தில் உலாவும் ஒரு பெரிய லிஸ்ட்டைக் காட்டினான். எங்க உரையாடலை அதே ஸ்லாங்ல கேக்குறீங்களா?

இதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா?

''மச்சி, 2007-ல் 'உன்னாலே உன்னாலே’னு ஒரு படம் வந்துச்சுல்ல. சனிக்கிழமை லேட் நைட்ல தூங்கி ஞாயித்துக்கிழமை சீக்கிரமா எந்திரிச்ச மாதிரியே ஹீரோ வருவாரே... அந்தப் படத்துல 'ஜூன் போனால்...’னு ஒரு அழகான பாட்டு. கொள்ளைப் பயலுக அந்தப் படம் வந்த டைம்ல அந்தப் பாட்டோட ஓப்பனிங் பிட்டை ரிங் டோனாவே வச்சிருந்தாய்ங்கே... போனவாட்டி ஒரு ஃப்ரெண்ட் லிங்க் அனுப்பி இருந்தான். பிரிட்டிஷ் பாய்பேண்ட் ப்ளூ குழுவின் 'ஆல்ரைஸ்’ என்ற ஆல்பத்தில் இருந்து

இதுக்குப் பேருதான் காப்பி ரைட்டா?

அப்படியே அங்கங்கே உருவி ஃபில் பண்ணி இருக்காரு. அதே படத்துல 'இளமை உல்லாசம்’னு ஒரு பாட்டு இருக்கு. ஜமாய்க்கா நாட்டோட ரெகே பாடகர் இனிகாமோஸியோட 'ஹியர் கம்ஸ் தி ஹாட் ஸ்டெப்பர்’ பாட்டை வெச்சு அழகா மேட்ச் பண்ணி இருக்காரு ஹாரிஸ். காப்பி அடிக்கிறதுக்கும் என்னா டேலன்ட் வேணும் தெரியுமா? 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துல, சரத்குமார் நம்ம ஜோதிகாவைப் பார்த்து 'கருகரு விழிகளால்...’னு ஒரு பாட்டுப் பாடுவாரே... அந்தப் பாட்டு அப்படியே 'ஹிட் யூ வித் தி ரியல் திங்ஸ்’னு ஒரு பாட்டு. அயர்லாந்து நாட்டு 'வெஸ்ட் லைஃப்’னு பாய்ஸ் பேண்ட் க்ரூப்போட ஒரு பாட்டுல அப்படியே இருக்கு. 'இன் மை ட்ரீம்ஸ்-நானா’னு யூ-டியூபில் ஹிட் ஆன ஒரு பாட்டுதான் 'ஆதவன்’ படத்துல 'வாராயோ வாராயோ மோனோலிசா’வா மாறி இருக்கு. 'வாரணம் ஆயிரம்’ 'அடியே கொல்லுதே’ பாட்டு அப்படியே 'லவ் பாம்’னு ஆல்பத்துல இருக்கு... 'காட் ரெஸ்ட் யே மெர்ரி ஜென்டில்மென்’ ஆங்கில ஸ்தோத்திரப் பாட்டுதான் 'லேசா லேசா’ படத்துல 'உள்ளாகி உள்ளாகி’னு உருமாறி உருவாகி இருக்கு... 'எங்கேயும் காதல்’ படத்துல வர்ற டைட்டில் ஸாங் அப்படியே பிரபல பாப் பாடகர் அகானோட 'டோன்ட் மேட்டர்’ பாட்டைப்போலவே இருக்கு'' என்று ஜெயலலிதாவும் கருணாநிதியும் விடும் அறிக்கைகளில் இருக்கிற புள்ளிவிவரங்கள் மாதிரி அடுக்கிக்கிட்டே போனான்.

''டேய் நிப்பாட்டு! என்னோட ஃபேவரைட் மியூஸிக் டைரக்டர்டா அவரு... இதுக்கு மேலே எதுனாச்சும் ஹாரிஸைப் பத்தி தப்பாப் பேசினே... மவனே கொன்டேபுடுவேன்'' என்றதும் வாயை மூடினான். ஆனாலும் ரெண்டு நாள் கழிச்சு வந்து திரும்பி வாயைக் கிளறினான்.

''மச்சி, நான் சொன்ன லிஸ்ட்டை நீ கேளு, கேட்காமப் போ... உன் இஷ்டம். ஆனா, நம்ம தங்கச்சிமடம் மேரி மாதா கோயில்ல சின்ன வயசுல கேட்டோமே... 'ஆவியானவரே... தூய ஆவியானவரே...’ பாட்டுத்தான் 'பார்த்த நாள் முதலாய் உன்னைப் பார்த்த நாள் முதலாய்’னு 'வேட்டையாடு விளையாடு’ல வந்திருக்கு. அது யேசுநாதர்னா, 'நண்பன்’ படத்துல 'இருக்கானா£ இல்லையானா’ பாட்டோட ஆரம்ப பீட்டு அப்படியே நம்ம எஸ்.பி.பி பாடுவார்ல 'நமச்சிவாய நமச்சிவாய’னு அந்தப் பாட்டோட பீட்டு மாதிரியே கேட்குறது எனக்கு மட்டுமா... உனக்கு இல்லையா?’னு கேட்டுட்டுப்போனானே ஒரு கேள்வி.

ஏங்க சொல்லுங்க, இது எல்லாமே நிஜமாலுங் களா?

-ஆர்.சரண்