Published:Updated:

'யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை பயன்படுத்த மாட்டேன்: நடிகர் சிம்பு அறிவிப்பு!

Vikatan Correspondent

சென்னை: இனிமேல், 'யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என நடிகர் சிலம்பரசன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''நான் ஆன்மீகத்தில் ஈடுபட்டதன் காரணமாக சமீப காலமாக என்னுடைய சிந்தனையில் அபரிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றத்தின் மிக முக்கியமானதாக 'யங் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை இனிமேல் பயன்படுத்த மாட்டேன்.

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில், பட்டங்கள் வளரும் கலைஞனுக்கு அவசியமற்றது என்று கருதுகிறேன். என் மீது அன்பு கொண்டவர்களை தாண்டி, அனைவரது அன்பையும், மரியாதையையும் பெற வேண்டும் என எண்ணம் எனக்கு மேலோங்கி வருகிறது. இதன் முதற்கட்டமாக 'யங் சூப்பர் ஸ்டார்' பட்டத்தை துறந்திருக்கிறேன்.

என்னுடைய திரை வாழ்வில் முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறேன். என்னுடைய இமேஜையும், அந்த இமேஜ் எனது ரசிகர்களிடையே ஏற்படுத்தும் விளைவுகளையுமே முக்கியமானதாக கருதுகிறேன். என்னுடைய இந்த முடிவை என்னுடன் என்றென்றும் இருக்கும், இருக்கப்போகும் என ரசிகர்கள் ஏற்று ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்.