Published:Updated:

ரஜினிகாந்த் பற்றிய செய்தி உண்மையில்லை: கே.எஸ்.ரவிக்குமார்

Vikatan Correspondent
ரஜினிகாந்த் பற்றிய செய்தி உண்மையில்லை: கே.எஸ்.ரவிக்குமார்
ரஜினிகாந்த் பற்றிய செய்தி உண்மையில்லை: கே.எஸ்.ரவிக்குமார்
ரஜினிகாந்த் பற்றிய செய்தி உண்மையில்லை: கே.எஸ்.ரவிக்குமார்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி உண்மை இல்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் "லிங்கா" படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், சண்டை காட்சிகளை படமாக்கியபோது ரஜினிகாந்த் மயங்கி விழுந்துவிட்டதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை முதல் செய்திகள் பரவி வந்தன.

இதை பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு என்ன ஆனதோ என்று நினைத்து பெரும் கவலை அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் நடிகர் ரஜினிகாந்த நலமுடன் உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "லிங்கா படப்பிடிப்பின்போது ரஜினிகாந்திற்கு உடல்நலம் சரியில்லை என்று கர்நாடக செய்தித்தாளில் செய்தி வெளியாயின. அந்த செய்தியில் எள்ளவும் உண்மை இல்லை. ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவர் சந்தோஷமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். "லிங்கா" படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.