Published:Updated:

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

Published:Updated:
அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!
அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

சின்னவீட்டுக்கும் முருங்கைக்காய்க்கும் முந்தானை முடிச்சுப் போட்ட எங்க சின்ன ராசா இவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• படத்தின் அனைத்து டிபார்ட்மென்ட்களையும் கைகளில் எடுத்துக்கொண்டு தனித் தவில் வாசிக்கும் ஆல் இன் ஆல் இம்சை அரசர்!

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

'ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ்தாத்தா’ என்ற ஒண்ணாப்பு இந்திப் பாடத்தையே காமெடி டயலாக்காக மாற்றிக்காட்டிய ஜாலக்காரர்.

• அமலா முதல் மும்தாஜ் வரை நிறைய ஹீரோயின்களை அறிமுகப்படுத்தினாலும் 'பூஜாவுக்கு பூந்தி கொடுப்பேன், லதாவுக்கு லட்டு கொடுப்பேன்’ என ரைமிங்காய்ப் பேசும் இவர் படத்து ஆன்ட்டி ஹீரோக்கள் எல்லோரும் இப்போது எந்தக் கிரகத்தில் இருக்கிறார்களோ, டி.ஆருக்கே வெளிச்சம்!  

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

'என்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரலாம். பச்சே... உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது’ என்று இவர் சொன்ன 'கெமிஸ்ட்ரி டயலாக்’, எந்த கெமிஸ்ட்ரி பாடப் புத்தகத்திலும் இல்லாத புது ஃபார்முலா!

• 'முள்ளு மேல சேலை விழுந்தாலும்... சேலை மேல முள்ளு விழுந்தாலும் கிழியுறது என்னவோ சேலைதான்’ எனக் கண்கள் கலங்க தலையைக் கோதியபடி இவர் பேசும் டரியல் டயலாக்கெல்லாம் ஒரு காலத்தில் தமிழ்த் தாய்மார்களின் கண்ணீருக்கு கியாரன்டி என்பதெல்லாம் எஸ்.டி.டி, தட் மீன்ஸ் வரலாறு!

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

மகனை ஹீரோவாக்கிடலாம் என கங்கணம் கட்டிக்கொண்டு பக்கவாட்டில் பக்கோடாவோடு கதை கேட்கும் பாசக்காரத் தந்தை. மகனோ, இருக்கிற பப்களில் எல்லாம் யுவதிகளோடு 'பம்ஜிக்கு பம்ஜிக்கு’ என கங்னம் ஸ்டைல் டான்ஸ் ஆடுகிறார்!  

• தொடையிலும் தோளிலும் தட்டி இவர் பாடும் ஆப்பிரிக்கன் கானா உங்களை 'எஸ்கேப்புரா சூனா பானா’ சொல்லவைக்கும்!

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆராலேயே என் வாரிசு எனப் புகழப்பட்டவர். அவர் மறைவுக்குப் பின் எம்.ஜி.ஆர். வாரிசாக உருவாக நினைத்தவரின் வேட்டியை உருவி ஓரமாக உட்காரவைத்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். இப்போது எதிர் அணியில் இருந்தாலும் பிரச்சார வேனில் மட்டும் இடம் பிடிக்கும் அளவுக்கு அரசியல் செல்வாக்கோடு(?) இருக்கிறார்!

• தி.மு.க-வில் கொ.ப.செ-வாக கொடி கட்டிப் பறந்த இவர், தனியரு மனிதனாகக் கட்சி ஆரம்பித்து தனியரு மனிதனாகவே இன்றுவரை நடத்துகிறார். சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் பல டிபார்ட்மென்ட்களை ஹேண்டில் பண்ணியதாலோ என்னவோ, அரசியலிலும்  தலைவர், தொண்டர் எல்லாமும் இவரேதான்!

அவங்க அவங்கதான்.. இவங்க இவங்கதான்!

ட்ரில் மாஸ்டர்களின் ஸ்டெப்ஸ் போட்டு டான்ஸில் புது வெரைட்டி காட்டியவர் என்றாலும் அம்புலிமாமா, வாண்டு மாமா கதைகள் சொல்வதில் பார்ட்டி செம கில்லாடி. 'அதுல என்ன சமாச்சாரம்னா’ என இவர் ஹஸ்கி வாய்ஸில் ஸ்க்ரீனில் பேச ஆரம்பித்தாரென்றால், கில்மா உப்புமா கிண்டப்போகிறார் என்று அர்த்தம்!

• நீங்கள் சூப்பு கொடுத்தால் 'எனக்குக் கொடுக்காதே சூப்பு... உனக்கு வெச்சிருவேன் ஆப்பு!’ எனவும், இவர் வீட்டுக்காரம்மாவே காபி கொடுத்தால், 'எனக்கே காபியா... உங்கம்மா மாமியா... கிச்சன்ல சேமியா...’ என ரைமிங் பஞ்ச்சால் படுத்தி எடுக்கும் பஞ்சர் டிஞ்சர்!

- ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism