சினிமால்
• 'மன்மத ராசா’ என்று செம குத்தாட்டம் போட்ட சாயாசிங்கை நினைவிருக்கிறதா? 'ஆனந்தபுரத்து வீடு’ படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாத சாயாசிங், இப்போது 'இது கதிர்வேலன் காதல்’ படத்தில் உதயநிதிக்கு சகோதரியாக நடிக்கிறார். சாயாசிங்கை ஆயா சிங்கா ஆக்கிட்டீங்களேப்பா!
• சல்மான், ஷாருக், ஷாகித், ரன்பீர் என படா ஹீரோக்களுடன் ரவுண்டு கட்டிய பிரியங்கா சோப்ரா, இப்போது தெலுங்கில் ராம் சரணுடன் 'சஞ்ஜீர்’ படத்தில் பொம்மைகள் விற்கும் பெண்ணாக நடித்து வருகிறார். ரெண்டு பேருக்குமே உதடு பெருசு!
• 'டாப்ஸி’ தெலுங்கில் நடித்த 'மொகுடு’ படத்தில் கவர்ச்சி மழையில் ரசிகர்களைத் திக்குமுக்காடவைத்தார். அடுத்து 'மிஸ்டர் பெர்ஃபெக்ட்’, 'வீரா’ படங்களிலும் காட்டோ காட்டு எனக் காட்டி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். தமிழில் மட்டும் கிளாமர் காட்டாமல் இருந்த டாப்ஸி, எப்படியும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று 'முனி 3’ படத்தில் ஓவர் கிளாமர் காட்டத் தயாராகி விட்டாராம். வெயிட் அண்ட் ஸீ!
• படங்களில் பாடுவதற்கு ஒரு பாட்டுக்கு மூன்று லட்சம் கேட்கப்போகிறாராம் சிம்பு. பாவம், புள்ளைக்கு செலவு இருக்கும்ல!

• நடிகர் ஜெய், அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம். 'சுப்பிரமணியபுரம்’ படம் பார்த்துப் பாராட்டியதில் இருந்து அஜித்துடன் நெருக்கமாம். ஆமா, அதில தலையைத் தலையை ஆட்டி இருப்பார்ல, அதான் 'தல’க்குப் பிடிச்சிருக்கும்!
• தெலுங்கில் நாகார்ஜுனா நடித்த 'தமருகம்’ படத்தில் ஐட்டம் சாங்குக்கு ஆடிய சார்மி, அதை ட்விட்டரில் வெளியிட, ஏகப்பட்ட ஹிட்ஸ்கள் அள்ளியதாம். இதைப் பார்த்த சஞ்சய்தத், விவேக் ஓபராய் போன்றவர்கள் சார்மியை இந்திக்கு அழைத்தார்களாம். இந்தப் பாட்டுக்கு முதலில் அழைக்கப்பட்டு, ஆட மறுத்தவர் லட்சுமிராய். சைக்கிள் கேப்புல சாதிச்சுட்டாரே சார்மி!
• டின் பீர் இடை அழகிகளாக இருந்த அஞ்சலி, ஓவியா போன்றவர்கள் பப்ளிமாஸ் ஆக மாறும் நேரத்தில் , ஹன்ஸிகா மெலிந்து 'சிக்’ என மாறி உள்ளார். நயன்தாரா, த்ரிஷா இவங்க மட்டும் உப்பாமலும், மெலியாமலும் இருப்பதற்குக் காரணம் பகலிலும் குடிப்பதுதான்... தப்பா நினைக்காதீங்க. 'ஓட்ஸ் கஞ்சி’ங்க!

• இயக்குனர் ஷங்கர் 'ஐ’ படத்தை முடித்துவிட்டு அடுத்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைவார் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிப் படமாக வெளிவருமாம். 'சிட்டிபாபு’னு டைட்டில் வைக்கலாம்!
• தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஹிட் அடித்த படம் 'மரியாதை ராமண்ணா’. அதன் ரீமேக்கில் சந்தானம் நடிக்கவுள்ளதாகத் தகவல். ஆக, அப்பாடக்கர் ஆகிட்டீங்க!