Published:Updated:

ஸ்டார் டயட்ஸ்!

ஸ்டார் டயட்ஸ்!

நினைச்சால் ஒல்லிப்பிச்சான்,  அப்புறம் குண்டாஸ், சிக்ஸ்பேக் என்று மாறும் சினிமா நட்சத்திரங்களின் டயட்தான் என்ன?

விஜய்

இயல்பிலேயே அளவான உடம்புதான். ''இரண்டு இட்லி சாப்பிட்டேன்'' என்பதையே பெரிய அளவில் கண்களை விரித்துச் சொல்வார். தோசை பிடிக்கும். அதுவும் இரண்டுதான். மஞ்சள் கரு நீக்கி நான்கைந்து முட்டைகளை அவித்துச் சாப்பிடுவார். காலையில் ஜுஸ் அவசியம் வேண்டும். நார்ச்சத்து உள்ள மாதுளம்பழம் ஜுஸ்தான் ரொம்பப் பிடிக்கும். மதியம் கட்டாயம் மீன் வேண்டும். ஆனால், பொறித்த மீனுக்குத் தடா!

ஸ்டார் டயட்ஸ்!

விக்ரம்

ஷூட்டிங் இல்லையென்றால் சாப்பாட்டில் வெளுத்து வாங்குவார். ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டால், அப்படியே மாறிவிடுவார். காலையில் ஒரு வாழைப்பழம், ஆறு முந்திரிகள், நான்கு பேரிச்சம்பழங்கள், ஒரு லிட்டர் தண்ணீர், மதியம் ஆறு சிக்கன் லெக் பீஸ்கள், கொஞ்சம் அரிசி சாதம், ரசம். மாலை ஏதாவது ஒரு பழச்சாறு, இரவு இரண்டு சப்பாத்திகள், பருப்பு, வெஜிடபிள் சாலட்ஸ். வாரத்திற்கு ஒரு நாள் மட்டன் பிரியாணி!

சூர்யா

டயட்டில் படுகெட்டி. அப்பா சிவகுமாரே நொந்துபோய் ''உடம்பைப் போட்டுப் படுத்தாதே'' எனச் சொன்னது உண்டு. காலையில் இரண்டு இட்லி, ஜுஸ் மட்டும்தான். மதியம் கொஞ்சம் சிக்கன் பீஸ், சப்பாத்தி, ஒரு கைப்பிடிச் சோறு, பழத்துண்டுகள். இரவு சப்பாத்தி இரண்டு மற்றும் ஜுஸ். வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஹெவியாக பிரியாணி!

தனுஷ்

எந்த டயட்டும் தேவைப்படாத ஸ்லிம் பாடி. தீவிர வெஜிடேரியன். நான் வெஜிடேரியன் வாசம்கூட ஆகாது. '3’ படத்திற்காக ஸ்கூல் பையனாக மாறவேண்டி இருந்தபோது மட்டுமே கடுமையான எக்சர்சைஸ் செய்தார் தனுஷ்!

ஸ்டார் டயட்ஸ்!

சிம்பு

சிம்புக்கு டயட் எதுவும் கிடையாது. அதுவும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்... சான்சே இல்லை. மற்ற நாட்களில் காலை உணவு ஜுஸ் மட்டும்தான். கொஞ்ச நேரம் கழித்து சிறிது சாதம், சப்பாத்தி, சிக்கன் துண்டுகள் சாப்பிடுவார்!

ஆர்யா

ஆர்யா அருமையாக, வகையாகச் சாப்பிடுவார். அவர் வீட்டுப் பிரியாணியே பிரசித்தம். ஆனால், வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி. காலை கம்மங்கூழ் மட்டுமே. மதியம் லெக்பீஸ் சிக்கன், கொஞ்சம் சாதம், வேகவைத்த காய்கறிகள். இரவு சப்பாத்தி மட்டும்தான். வீக் எண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்!

விஷால்

டயட்டில் நம்பர் ஒன் கில்லி. காலையில் நாலு வெள்ளைக் கருவோடு உள்ள முட்டை மட்டும். மதியம் சிக்கன் துண்டுகள், சப்பாத்தி, காய்கறிகள், கேப்பைக் கூழ். இரவில் பழங்களைச் சாப்பிட்டு உறங்கிவிடுகிற மனிதர் விஷால்!

- கணபதி