'கடல்’ கௌதமுக்குரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் இருந்து திடீர் அழைப்பு. அடுத்து ஐஸ்வர்யா இயக்க, அனிருத் இசைக்கும் படத்தின் ஹீரோ, கௌதம் கார்த்திக்.

இளையராஜா இசையமைத்திருந்த 'புத்தம் புதுக் காலை...’ பாடல் ஏனோ 'அலைகள் ஒய்வதில்லை’படத்தில் இடம்பெறவில்லை. இப்போது அந்தப் பாடலை கார்த்திக் ரிஷி இயக்கிவரும் 'மேகா’ படத்தில் பயன் படுத்தியிருக்கின்றனர். 'மேகா’ படத்தின் பாடல்கள், பின்னணி இசைக்கு ஹங்கேரி சென்று அங்குள்ள இசைக் கலைஞர்களைப் பயன்படுத்தியிருக்கிறார், ராஜா.

வழக்கமாகக் கிழக்கு கடற்கரைச் சாலையில் காரை கன்னாபின்னாவென ஓட்டுவார் த்ரிஷா. இப்போது தெலுங்கில் நடித்துவரும் படத்தில் கார் சேஸிங் காட்சியில் டூப் போடாமல் வேகமாக காரை ஓட்டி ஸ்டன்ட் மாஸ்டருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். படத்தின் டைட்டில் என்ன தெரியுமா 'ரம்’. 'ரம்பா.. ஊர்வசி.. மேனகா’ பெயர்களின் சுருக்கத்தைத்தான் 'ரம்’ என்று கிக்காக்கியிருக்கிறார்கள்.

தமிழ் இயக்குநர்கள் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படமெடுத்துக் கொடுப்பது ஃபேஷனாகிவிட்டது. 'ஐ’ படத்தை இயக்கிவரும் ஷங்கரை சமீபத்தில் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பாளர் சந்தித்து படம் எடுத்துத்தருமாறு கேட்டிருக்கிறார். 'நான் எந்த ஸீனை எப்படி எடுப்பேன், எவ்வளவு செலவாகும்னு எனக்குக் கணக்குத் தெரியாது. எனக்கு ஃபர்ஸ்ட் காப்பி விஷயம் சரிப்பட்டு வராது...’ என்று திருப்பி அனுப்பிவிட்டாராம்.

'எத்தனை கோடி சம்பளம் வாங்கினாலும் காலையில நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியலை...’ என்று சினிமா மேடையில் சொன்ன ஏ.ஆர். முருகதாஸ்தான், தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர் என்கிற புகழைப் பெறுகிறார்... ஷங்கரைவிட அதிகமாக. ஆமாம், 20 கோடி பெறுவது, தயாரிப்பாளர் லண்டன் கருணாஸ் படத்துக்காக!