
தீரத்தீர இளமை துள்ளும் படங்களை எடுத்தவர் இடையில் எம்.ஜி.ஆர். படம் எடுத்து நம்மைச் சித்தம் கலங்கவைத்தார். இப்போது வேற உலகத் துக்கு அழைத்துச் செல்லத் தயாராகிறார். சூதானம் கய்ஸ்!
இயக்குநராக ஒருகாலத்தில் எல்லோரையும் 'குஷி’ப்படுத்தியவர், நடிகராகி நியூட்டனின் மூன்றாம் விதியை நிரூபித்து நம்மைக் கொடுமைப்படுத்துகிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அகர்வால் ஸ்வீட்டை தமிழ்கூறும் நல்லுலகுக்குக் கொண்டுவந்து, 'வரட்டுமே... லட்டு வரட்டுமே’ என கஸ்தூரிராஜா சொன்னதை நிறைவேற்றிப் பின்பு, 'போகட்டுமே...’ என ஸ்வீட்டைக் கைவிட்டவர்!
44 வயதாகியும் சினிமாவை ஒரு வழி பண்ணுவதற்காகவே, இன்னும் கல் யாணம் பண்ணாமல் இருக்கும் கட்டையோ கட்டைப் பிரம்மச்சாரி!
வில்லேஜ் அப்பா ஃபீல்டு அவுட் நேரத்தில் என்ட்ரி கொடுத்தார். தம்பியை சைக்கோவாகக் காட்டி ஹிட் ஹிஸ்டரியைத் துவக்கிவைத்ததோடு இன்று வரை அதைத் தொடரவும் செய்கிறார்!
இவர் நடிப்பே சைக்கோவைப்போல இருக் கும். 'இவர்கிட்ட என்னமோ இருக்கு, ஆனா இல்லை’ என ஆடியன்ஸையே குழப்பல் கும்மி அடிக்கவைப்பார்!
கேம்ப் ஃபயர் டான்ஸ் என்றால், சாருக்குக் கொள்ளைப் பிரியம். சோழர் பரம்பரையையே 'தீயா வேலை செய்யணும் கொமாரு’ என்று கேம்ப் ஃபயர் ஆடவைத்தவர்!
இடுப்பு ஏரியா இவருடைய ஃபேவரைட் ஸ்பாட். தன் படங்களில் ஹீரோயினின் இடுப்பை ஒரு ஃபிரேமிலாவது க்ளோஸ்-அப்பில் காட்டி பசங்களின் நெஞ்சில் பீர் வார்ப்பார்!
ஹீரோயினின் காதலுக்காக மழையில் வெறி வந்ததுபோல் ஹீரோவை ஆடவைப்பார். தப்பித்தவறி ஹீரோயின்கள் காதலித்தால், 'அட்ரா அவள... வெட்ரா அவள’ என வயலென்ஸ் வாய்ஸ் கொடுப்பார்.
'சர்க்கரை இனிக்குற சர்க்கரை’ என சிம்ரனுக்குப் போட்டியாக இவர் ஆடிய இடுப்பு டான்ஸ் அகில உலக ஃபேமஸ். தம்பியின் மனைவியை டாவடிக்கும் 'வாலி’பன், ஊசி நூல், பி.எஃப் போன்ற இரட்டை அர்த்த வார்த்தைகள் என தன் படங்களில் வில்லங்கம் காட்டும் மனிதருக்கு, நீல கலர் சட்டை பார்சல் அனுப்பலாம்!
இயக்கிய ஒரே தெலுங்கு படமும் ஹிட் ஆனதால், இவருக்குத் தெலுங்கிலும் மவுசு உண்டு. அடுத்து த்ரிஷாவின் பாய்ஃப்ரெண்ட் ராணாவை வைத்து, தெலுங்குப் படம் இயக்கப் போகிறார். தெலுங்கிலும் தீயா வேலை செய்யணும் கொமாரு!
தமிழில் கட்டம் சரியில்லாததால் புலி டான்ஸ் ஆட தெலுங்கு தேசம் பக்கம் கரை ஒதுங்கினார். புலியை ஆந்திர வாலாக்கள் முறத்தால் அடித்து விரட்ட, இப்போது 'இசை’யோடு தமிழுக்கே வந்திருக் கிறார்!