Published:Updated:

சினிமால்

சினிமால்

சினிமால்

தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும் 'சந்திரா’ படத்தில் ஸ்ரேயா ஒரு பாடல் காட்சியில் செம கிளாமராக நடித்துள்ளார். வடபழனி க்ரீன் பார்க் ஓட்டலில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் அந்தப் பாடலைப் போட்டுக்காட்ட, அம்மாவுடன் வந்திருந்த ஸ்ரேயாவுக்கு வெட்கம் தாள முடியவில்லை. ஓ, இன்னும் அதெல்லாம் இருக்கா?

சினிமால்

'சும்மா நச்சுன்னு இருக்கு’ படத்தில் யூத்து வேடம் கட்டும் தம்பி ராமய்யாவுக்காக, டி.ஆர். ஒரு பாட்டுப் பாடி இருக்கிறாராம். போடு டண்டணக்கா!

சினிமால்

'மன்மதன் அம்பு’ படத்துக்கு முன்பே ஆஸ்கார் பிலிம்ஸிடம் கமல் வாங்கிய அட்வான்ஸ் அப்படியே இருக்கிறதாம். கமல் 'விஸ்வரூபம் 2’ முடித்ததும் மீண்டும் அடுத்த படத்துக்கு கமலும் ஆஸ்கார் பிலிம்ஸும் இணைகிறார்கள். உங்க படத்துல கிஸ்ஸிங் சீன் வந்து ரொம்ப நாளாச்சு கமல்!

சினிமால்

ஜெயப்பிரதாவின் மகன் சித்தார்த்துடன் 'வாலிபன்’ படத்தில் ஜோடி சேரும் ஹன்சிகா வுக்காக, விதவிதமான காஸ்ட்யூம்களை ஜெயப்பிரதாவே தேர்வுசெய்தாராம். ஹன்சிகா எப்படி எப்படி விதவிதமான உடைகளில் வந்தால் ரசிகர்கள் பரவசப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும் என்கிறார் ஜெயப்பிரதா. அப்போ, கம்மியாத்தான் இருக் கும் காஸ்ட்யூம்ஸ்?

சினிமால்

நடிகர் செந்தில் மகன் ஹேமச்சந்திரபிரபு, ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவரை நடிக்க வைக்க தினம் இருவராவது செந்தில் வீட்டுக் கதவைத் தட்டு கிறார்களாம். 'நல்ல கம்பெனியா இருந்தா வாங்க... என்கிட்டே பணம் கேட்கிறவங்க வராதீங்க’ என விரட்டி அனுப்புகிறாராம் செந்தில். ''கவுண்டமணி மறுபடியும் நடிக்கிறாரே... நீங்க நடிக்க லையா?'' என்றால், 'அப்படிப்பட்ட காமெடிக் களம் இருந்தால் நடிக்க லாம்’ என்கிறார். அப்போ ஒண்ணு இங்க இருக்கு, இன்னொண்ணு...?

சினிமால்

அக்கா சாயாசிங்கும் அவர் கணவரும் பிரிந்து வாழ... அவர்களைச் சேர்த்துவைக்கும் தம்பியாக உதயநிதி கோவைக்கு வருகிறார். அங்குதான் நயன் தாராவைச் சந்திக்கிறார். அக்கா குடும்பத்தைச் சேர்த்துவைப்பதுடன் தனது காதலியுடன் ஜோடி சேர்கிறார் உதயநிதி. இதுதான் 'இது கதிர்வேலன் காதல்’ படத்தின் ஒன் லைன். ஏம்பா இதெல்லாம் நாங்க எத்தனை படத்துல பார்த்திருப்போம்!

சினிமால்

'கும்கி’, 'சுந்தரபாண்டியன்’, 'குட்டிப்புலி’, 'மஞ்சப்பை’ என பெரிய பேனர் படங்களே லட்சுமி மேனனுக்குத் தொடர்ந்து கிடைப்பதால், மற்ற நடிகைகள் செம காண்டில் இருக்கிறார்களாம். விரைவில் அமெரிக்கா சென்று உடல் மெலிவதற்காகச் சிகிச்சை பெற முடிவுசெய்துள்ளார். ஆமாங்க, இல்லைனா கும்கி மாதிரியே ஆயிடுவீங்க!

சினிமால்

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா 'காக் டெயில்’ படம் பார்த்துவிட்டு தீபிகா படுகோனாவுக்கு வாழ்த்து அனுப்பினாராம். ஆனால், இதுவரை தீபிகா தரப்பில் ஒரு மெசேஜ் கூட வரவில்லை. 'இனிமேல் யாருக்கும் வாழ்த்து சொல்லப் போவதில்லை. இது போட்டிகள் நிறைந்த உலகம். என் நல்ல மனம் அவருக்குப் புரியவில்லை’ எனப் புலம்புகிறார் அனுஷ்கா சர்மா. அழகான பெண்களிடம் போட்டி இருக்கலாம். பொறாமை கூடாது!

சினிமால்
சினிமால்

காவிரிப் பிரச்னையில் தமிழகத் துக்குச் சாதகமான தீர்ப்பு வந்துவிட்டதால் அதை ஏன் கையில் எடுக்க வேண்டும் என யோசித்த சீனுராமசாமி, அடுத்து விமல், விஜய் சேதுபதியை வைத்து இருவரையும் மோதவிட்டு படம் இயக்க இருக்கிறார். இருவருக்கும் சமமான கதாபாத்திரமாம். சண்டைப்பறவைனு பேர் வைப்பாரோ?

சினிமால்

அனுஷ்காவுக்கு ஜோசியம், ஜாதகத்தின் மீது அபார நம்பிக்கை. இப்போது அவரது ஜாதகத்தில் கிரக பலன்கள் எதிர்மறையாக இருப்பதால், மலையாள மாந்திரீகர்களிடம் சென்று ஆலோசனை கேட்டாராம். அவர் பிறந்த நாள் அன்று அன்னதானம் வழங்கச் சொன்னாராம். 'அனுஷ்கா மலிவு விலை உணவகம்’ ஆரம்பிச்சிரலாமே!

சினிமால்

தமன்னா இப்போது பாலிவுட்டைக் குறிவைக்கிறார். அஜய் தேவ்கன், அக்ஷய்குமார், சல்மான்கான், சஞ்சய்தத் என நால்வருக்கும் மாறிமாறி பார்ட்டி கொடுத்து அசத்துகிறாராம். பாலிவுட்னாலே பார்ட்டிதானே... எப்பிடித்தான் தாங்குதோ!

சினிமால்

'வேட்டை’ படத்தில் சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் தெலுங்கில் ஆன்ட்ரியா நடிக்கிறார். ஹைதராபாத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ள ஆன்ட்ரியா, வாஸ்து பார்த்துதான் குடியேறினாராம். மனசுல குடியேறுவதற்கு வாஸ்து இல்லையே!

சினிமால்

மலையாளத்தில் மூன்று படங்களுக்கு நடிக்க அழைப்பு வந்ததை இனியா மறுத்துவிட்டாராம். காரணம் சம்பளம் குறைவு. 'மாசானி’ படத்தில் ஆதிவாசிப் பெண்ணாக வந்து ஆவியாக மாறும் கதாபாத்திரம் தன் மீது வெளிச்சம் பாய்ச்சும் என்கிறார். அழகான பேய்!