Published:Updated:

யாருக்காக... இது யாருக்காக!

யாருக்காக... இது யாருக்காக!

யாருக்காக... இது யாருக்காக!

யாருக்காக... இது யாருக்காக!

Published:Updated:
யாருக்காக... இது யாருக்காக!

'வசந்த மாளிகை’ படம் ரிலீஸ் ஆன அன்று, சிவாஜி கட்-அவுட்டுக்கு 5 லட்ச ரூபாய் பணமாலை சூட்டி அசத்தி இருக்கிறார்கள் ஜோலார்பேட்டை சிவாஜி ரசிகர்கள். அவர்களைச் சந்தித்தோம். பயபக்தியோடு கூட்டாகக் கொடுத்த பேட்டி இது.

''எங்க தெய்வம் சிவாஜி, படத்துக்குப் படம் வித்தியாசமா நடிப்பார். நாங்களும் இந்த 'வசந்தமாளிகை’ ரிலீஸுக்கு ஏதாவது வித்தியாசமாகப் செய்யணும்னு சிவாஜி கட்- அவுட்டுக்கு 10 லட்சத்துக்குப் பணமாலை போடுறதா முடிவு பண்ணினோம். எங்க நேரம்... புது கரன்சியே கிடைக்கலை. ஏறாத பேங்க் இல்ல, போகாத கவுன்சிலர் வீடு இல்லை(!) அந்தக் கரன்சிக்காக நாங்க பட்டபாடு இருக்கே, அப்பப்பா! கடைசியா 5 லட்சத்துக்குத்தான் புது கரன்சி நோட்டு கிடைச்சுது. இந்த நோட்டை பின் பண்றதுக்கு 10 பேரு எங்க குழுவுல இருக்கிறவரோட குடோனுக்குப் போயிட்டோம். அங்கே கரன்ட் இல்லை, ஃபேன் இல்லை. 5 1/2 மணி வரைக்கும் கண்ணு முழிச்சு வேலை செஞ்சோம். எட்டு மணிக்கெல்லாம் மாலையை ரெடி பண்ணி, சரியா பத்து மணிக்கு மாலையைச் சாத்திட்டோம். இதோட நிறுத்தப் போறதில்லை. அடுத்து தெய்வத்துக்குக் கோயில் கட்டப்போறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவாஜிக்கு சிலை வைக்கலாம்னுதான் முதல்ல முடிவு பண்ணினோம். 12 லட்ச ரூபாய்க்கு 10 அடி உசரத்துல சிவாஜி வெண்கலச் சிலை தயார் பண்ணலாம்னு சென்னைக்குப் போய் ஆர்டர் எல்லாம் குடுத்துட்டோம். எங்க கெட்ட நேரம், சுப்ரீம் கோர்ட்டு பொது இடத்துல சிலை வைக்கக் கூடாதுனு ஆர்டர் போட்டுடுச்சு. சரி, பொது இடம்தான் இல்லாமப்போச்சு, சொந்த இடத்துல சிலை வைப்போம்னு ரெண்டு லட்ச ரூபாய்க்கு இடம் பார்த்தோம். ஆனா, 25 லட்சத்துக்குக் குறைவா இடம் கிடைக்கலை. எங்க மன்றத்துல இருக்கிறவரோட இடம் ஏலகிரி மலையில் இருக்குது. மலை மாதிரி உயரமான இடத்துல கோயிலும் இருக்கிறதுதான் பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ணி கோவில் கட்டத் திருப்பணி ரெடியாகிட்டு இருக்கு. யாருகிட்டயும் ஒரு ரூபா கூட நாங்க நன்கொடை கேக்கல. நாங்களே சொந்தமா எல்லாத்தையும் செய்றோம்.

யாருக்காக... இது யாருக்காக!

அக்கா தங்கச்சிங்க மேல பாசமா இருக்கணும், அப்பா அம்மாவைக் காப்பாத்தணும்கிறது எல்லாம்

யாருக்காக... இது யாருக்காக!

சிவாஜி படத்தைப் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். ஒவ்வொரு வருஷமும் சிவாஜியோட பிறந்த நாளுக்கு சென்னையில அவரோட வீட்டுக்குப் போய் மரியாதை பண்ணுவோம். பீச்ல இருக்கிற எங்க தெய்வத்தோட சிலைக்கு மாலை போடுவோம்.''

''விஜய், சிம்பு, தனுஷ் மாதிரி இந்தக் காலத்து நடிகர்களுக்குக்கூட இவ்வளவு செலவு பண்ண மாட்டாங்க, நீங்க இவ்வளவு செலவு பண்ணியிருக்கீங்க?''

''விஜய், ரஜினியை விடுங்க சார். எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய ஆளு. அவரோட பிறந்த நாளுக்கு 5,000-த்துக்குக்கூட மாலை வாங்கிப்போடலை அவர் ரசிகருங்க. சிவாஜி எவ்வளவு பெரிய ஆளுன்னு காட்டுறதுக்குத்தான், நாங்க இவ்ளோ செலவு பண்ணினோம்!''

''ஆமா, சிவாஜி ஓவர் ஆக்டிங்னு சொல்றாங்களே?''

''அது எம்.ஜி.ஆர். ரசிகருங்க கிளப்பிவிட்ட பீதிங்க. சிவாஜி மாதிரி எம்.ஜி.ஆரால நடிக்க முடியாததால, அவங்க ஆளுங்க சும்மாவாச்சும் எதையாவது கிளப்பிவிடுவாங்க.''

ஆஹா, இன்னுமா உங்க சண்டை முடியலை?

- சீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism