Published:Updated:

அட, போர்வை கூடவா வெள்ளை!

அட, போர்வை கூடவா வெள்ளை!

அட, போர்வை கூடவா வெள்ளை!

அட, போர்வை கூடவா வெள்ளை!

Published:Updated:

''கோலிவுட்ல மட்டும்தான் க்ளிஷே காட்சிங்க இருக்கா? ஹாலிவுட்ல இல்லையா என்ன?''னு டைம்பாஸ் வாசகர் கோவிந்தசாமி கேட்டாரு. இதோ அவரோட ஆசைக்காக, ஹாலிவுட்டின் கலகல க்ளிஷே காட்சிகள்!

அட, போர்வை கூடவா வெள்ளை!

உலகம் அழியுறதுல உங்களுக்கு என்னங்கடா சந்தோஷம்? அடிக்கடி இவிய்ங்க படங்கள்ல உலகத்துக்கே எண்ட் கார்டு போட்ருவாய்ங்க. எங்கோ ஒரு கிரகத்துல இருந்து பறந்து வர்ற விண்கல்லையோ அல்லது வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்தோ உலகத்தைக் காபந்து பண்ணுவாரு நம்ம

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அட, போர்வை கூடவா வெள்ளை!

ஹீரோ. சும்மா எடுத்ததும் ஹீரோயிஸம் பண்ணினா எப்படி? ஒரு த்ரில் வேணாமா? டைவர்ஸ் ஆனதாலயோ அல்லது வேறொருத்தனுடன் உடன்போக்கிய காதல்(?) மனைவியை நினைச்சுக்கிட்டோ சரக்கடிச்சு சரக்கடிச்சு ஃபீலிங் பிகில் ஊதும் முன்னாள் சயின்டிஸ்ட்டாகத்தான் அநேக படங்கள்ல ஹீரோ வருவாரு. ஒபாமாவே போன்ல கெஞ்சி 'மிஷன்’க்கு கூப்பிட்டாலும் பிகு பண்ணி 'நோ’ சொல்வாரு. கடைசியில க்ளைமாக்ஸுக்கு நெருக்கமா சொரணை வந்து வீறுகொண்டு எழுந்து உலகத்தை அழிவிலிருந்து காப்பாத்தி மனைவியையும் மன்னிச்சு கிஸ் அடிச்சு எண்ட் கார்டு போடுவாரு. உலகமே உறைஞ்சுபோய் அழியுறப்பவும் தன் மகள், மகனைத் தேடித்தான் பெரும்பாலான படங்கள்ல மிஷன்ல இறங்குவாரு நம்ம ஹீரோ. அப்புறம் 'கழுதை, வந்தது வந்துட்டோம்... இந்த உலகத்தையும் காப்பாத்திட்டுப்போவோம்’னு போனாப்போகுதுனு காப்பாத்துவாய்ங்க... கட்டக் கடைசியில 1,000 இன்ஸ்ட்ரூமென்ட்கள் முழங்க 'தி எண்ட்’ தான்!

சொந்த வாழ்க்கையில ஒரு ஃபிகரைக்கூட உஷார் பண்ணத் தெரியாத, தாழ்வு மனப்பான்மை தமுக்கடிக்கும் டோங்கிரிப் பசங்கதான் சூப்பர்மேனாகவும் ஸ்பைடர்மேனாகவும் பறந்து பறந்து சாகசம் பண்ணி உலகத்தையே காப்பாத்துவாய்ங்க. என்னா ஹீரோத்தனம்? எத்தனை பேரு செத்தாலும் ஹீரோ, ஹீரோயின் மட்டும் சாகாம அங்கங்கே சிராய்ப்புகளோட தப்பிச்சு வெளில வருவாய்ங்க. கரெக்டா நம்மூரு போலீஸ் மாதிரி அந்த ஊரு போலீஸ் படையும் அங்கேயும் ஹெலிகாப்டர், வேன், டிரக்குனு வந்து நிப்பாய்ங்க!  

நம்ம ஊருல பெட்ரோல், டீசல் விக்கிற விலையில ரொம்பக் காஸ்ட்லி சேஸிங் பண்றது இன்னிய தேதிக்கு நம்ம 'டாடா சுமோ புகழ்’ ஹரி மட்டுந்தேன். ஆனா, ஹாலிவுட்டின் மொக்க டைரக்டர்கூட வில்லனுகளை ஹெலிகாப்டர்லதான் சேஸ் பண்ணவைப்பாரு. அம்புட்டு செலவு பண்ணி வர்ற பக்கிங்க கொஞ்சம் சூதானமா இருக்கக் கூடாது? சொல்லிவெச்ச மாதிரி ஹீரோவோ ஹீரோயினோ ஹெலிகாப்டர் பில்டிங்ல இருந்து டேக்ஆஃப் ஆகுறப்போ தாவித் தொங்குற கயித்தை கரெக்ட்டாப் பிடிச்சு, கீழே பேக்ட்ராப்ல சிட்டிபூரா தெரிய கொஞ்சம் கொஞ்சமாப் பறந்துக்கிட்டே மேலே போய், கரெக்ட்டா அங்கே துப்பாக்கியோட நிக்குறவனையும் ஹெலிகாப்டர் ஓட்டுறவனையும் கையாலயே பஞ்ச் பண்ணி சாவடிச்சு சேஃபா ஒரு இடத்துல ஹெலிகாப்டரை லேண்ட் பண்ணுவாய்ங்க. இதுல கொடுமை என்னன்னா, ஒருவாட்டிகூட ஃபோகஸ் கன் வெச்சும் ஒரு பயலும் கரெக்ட்டா ரெண்டுபேரையும் சுட மாட்டானுங்க. ஏன்யா எங்கூரு தளபதி தினேஷ், கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன்தான் இப்படில்லாம் பண்ணுவாங்கனா நீங்களுமா? ஸ்...யப்பா எத்தனை படத்துலடா இப்படி போங்கு ஃபைட்டைக் காட்டுவீங்க?

அப்புறம்... ஒரு காலத்துல இங்கிலீஷ் படம்னாலே நாமெல்லோரும் ஜுராஸிக் பார்க், அனகோன்டா, கிங்காங் படங்கள்போல ரணகளமா எடுக்கப்படுபவைனு நினைக்கும்படி வஞ்சனையில்லாம விலங்குகளையும் அப்பாவி ஜீவராசிகளையும் கொடூரமா சித்தரிச்ச பாவத்தைச் செஞ்சவய்ங்க ஹாலிவுட்காரனுகதான். இன்னிக்கு நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஒரு ஆளு அனகோண்டாவுக்குப் பல்லு வெளக்கிவிடுறதைப் பார்த்தப்போதான் தெரியுது... அனகோண்டா பாம்பு எம்புட்டு அப்பாவி ஜந்துன்னு! ஏன்யா இப்பிடி? ஏன்ன்ன்?

அட, போர்வை கூடவா வெள்ளை!

அதுலயும் காட்டுக்குள்ள ஆறு பேரு சோடியா கௌம்பிப்போயி கடைசில போறவய்ங்களாப் பார்த்து 'லபக்’ பண்றது மாதிரியே காட்டுவாய்ங்க. 'பாம்புகள் கூச்ச சுபாவிகள்... எப்பவும் செவனேனு தூங்கும்’னு டிஸ்கவரி சேனல்ல 'பியர் க்ரில்ஸ்’ அண்ணாச்சி டெமோ பண்ணிக் காட்டுறப்போதான் தெரியுது, விஷம் பாம்புகிட்ட இல்லை... இந்த ஹாலுவுட் பயலுககிட்டதானு! பொக்கிஷத்தையோ எதையோ தேடிப் போய் அகாலத்துல சாகுறவய்ங்கள்ல பெரும்பாலும் கருப்பின நடிகன் ஒருத்தனாத்தான் இருப்பான். அப்படி அவனைக் கொடூரமா சாகடிச்சுக் கொலவெறியைத் தீர்த்துக்கிறதுல அவிய்ங்களுக்கு அம்புட்டு சந்தோஷம். சோடி போட்டுப் போறாய்ங்கனு சொன்னேன்ல? ஆம்பிளைங்க என்ன கருமத்தை வேணும்னாலும் போட்டுக்கட்டும்... ஆனா, இந்தப் பொம்பளைங்க காக்கி பேன்ட்டும் முன்டா பனியனும் போட்டுட்டுப் போகுங்க. கவனிச்சிருக்கீங்களா? என்னது..? சரியாப் புரிபடலையா? அட, நம்ம செல்வராகவன் அண்ணனோட 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துல ஆன்ட்ரியா போட்டிருக்குமே... அதே காஸ்ட்யூம்தான் இந்த மாதிரி படங்களுக்குப் பூராவும் லேடீஸ் காஸ்ட்யூம்! (நம்ம ஆளு காஸ்ட்யூம் வரைக்கும் காப்பி அடிச்சாருன்னு நான் சொல்லலைப்பா!)

ஆம்பள பொம்பள வித்தியாசம் இல்லாம போறபோக்குல ஸ்காட்ச்சை சிப் பண்ணிட்டுப் போவாய்ங்க. தம் அடிக்காத ஹீரோயினைப் பார்ப்பது அரிதினும் அரிது. குறிப்பா பார்ல பக்கத்துப் பக்கத்துல ஹீரோவும் ஹீரோயினும் உட்கார்ந்து அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஹஸ்கி வாய்ஸ்ல பேசுனாய்ங்கனா, லிப் லாக் கிஸ் கன்ஃபர்ம். பாருக்குள்ளே இருக்கும் பாரை மறந்து விண்ணுலகம் போனதுபோல மூச்சுத்திணறத் திணற கிஸ் அடிப்பாய்ங்க. கட் பண்ணினா, வெள்ளை ஃபோம் மெத்தையில நெஞ்சுவரை போர்வையைப் போத்திக்கிட்டு எசகுபிசகாத் தூங்குவாய்ங்கே. அவனோ அவளோ ஆழ்ந்து தூங்குறப்போ இன்னொருத்தர் எழுந்திருச்சு அப்படியே காத்தாட பாத்ரூம் போறப்போதான், பயபுள்ளைக டிரெஸ் போடாம என்ன பண்ணி இருக்குங்கனு நம்ம ஆளுங்க கற்பனையிலேயே படத்தை ஓட்டிக்க வேண்டியதுதான். அது என்ன மாயமோ தெரியலை, இதுவரை நான் பார்த்த ஹாலிவுட் படங்கள்ல ஒன்ணுலகூட வேற கலர்ல மெத்தையோ போர்வையோ பார்த்ததே இல்லை. அதுசரி வெள்ளைக்காரன் படம் வெள்ளையாத்தானே இருக்கும்?

- ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism