Published:Updated:

சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:

• அமலாபால் 'நிமிர்ந்து நில்’ படத்தில் தெலுங்குப் பதிப்பில் நானியுடன் நடித்து வருகிறார். கேரளா, தமிழ்நாடு என ஃபேஸ்மென்ட்டை வலுவாகப் போடும் அமலாபாலின் அடுத்த குறி தெலுங்கு. தெலுங்கில் பெல்லங் கொண்டா சுரேஷ் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு, ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார். ஜுனியர் என்.டி.ஆர். படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். நிமிர்ந்து நின்னா சரி!

• ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தமிழில் இயக்கப்போகும் படம் எது, நாயகன் யார் என்று கோலிவுட்டில் பட்டிமன்றமே நடக்கிறது. அஜித்தும் ஏ.ஆர்.முருகதாஸும் ஒரு விழாவில் சந்தித்தபோது, ''நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு உதவ வேண்டும்'' என்றாராம் அஜித். ''நிச்சயமாக'' என்று சொல்லி இருக்கிறார் முருகதாஸ். அனேகமாக அடுத்த படம் நிக் ஆர்ட்ஸுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தை வைத்து இயக்குவார் என்கிறது கோடம்பாக்கம். சந்தோஷமாத் தலையாட்ட வேண்டிய செய்திதான்!

சினிமால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ஸ்ரேயா தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க, காட்டு காட்டு எனக் கவர்ச்சி காட்டிய தெலுங்குப் படங்களை தமிழில் வெளியிட ஃபைனான்ஸ் உதவி செய்கிறாராம். அந்த வரிசையில் தெலுங்கில் மிகவும் கிளாமராக நடித்த 'லவ் இஸ் பியூட்டிஃபுல்’ படத்தைத் தமிழில் டப் செய்து வெளியிட உதவி செய்திருக்கிறாராம். கரும்பு தின்னக் காசு!

• 'ஜில்லா’ படத்தை இயக்கும் இயக்குநர் நேசன் இதற்கு முன் 'முருகா’ என்ற படத்தை இயக்கியவர். அதன்பின் 'வேலாயுதம்’ படத்தில் ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். 'வேலாயுதம்’ படப்பிடிப்பில் விஜயுடன் ஏற்பட்ட நட்பில் விஜய்தான் ஆர்.பி.சௌத்ரியிடம் வாய்ப்பு வாங்கித் தந்தாராம். 'ஜில்லா’ கல்லா கட்டும்ல?

• தேமதுரக் குரலுக்குச் சொந்தக் காரரான கே.ஜே.யேசுதாஸ் நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு யுகபாரதியின் பாடல் வரியில் 'தலைவன்’ படத்துக்காகப் பாடியுள்ளார். இது அம்மாவைப் புகழ்ந்து பாடும் பாடலாம். பாஸ்கரன் நடிக்கிறதால அந்த 'அம்மா’வைப் பற்றிய பாடலா பாஸ்?

• வடிவேலு, ஜோதிடம், ஜாதகம், வாஸ்துவில் அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டவர். ஞாயிறு என்றால் வெள்ளை சட்டை, வியாழன் என்றால் மஞ்சள் சட்டை, வெள்ளி என்றால் வெளிர் நீலம் என்று ராசி பார்த்து சட்டை போடும் அளவுக்குக் கைப்புள்ளை தீவிரம். இப்போது பங்குனி, சித்திரை முடிந்து வைகாசியில்தான் புதிய படம் நடிக்கவுள்ளாராம். எலெக்ஷன் எந்த மாசம் வரும்னு தெரியுமா?

• இளையராஜாவின் அண்ணன் மறைந்த பாவலர் வரதராஜன் மகன் ஜோவி இயக்குநர் ஆக அறிமுகம் ஆகும் 'நாலு பேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தில் நடிக்கும் பவர்ஸ்டாருக்குத் திருடர்களான நான்கு பேரைத் திருத்தும் கேரக்டராம்!

சினிமால்

• 'மேதை’ படத்திலேயே நம்மைக் கண்ணைக் கட்ட வைத்த ராமராஜன், இப்போ ரொம்ப ஃப்ரீ. அ.தி.மு.க-வின் மேடைகளில் பேசிக்கொண்டிருக்கும் ராமராஜன், வாய்ப்புக் கிடைத்தால் பசையான கட்சிக்காரர்கள் சிக்கினால்,  ''அண்ணே, வெயிட்டான ஸ்கிரிப்ட் இருக்கு. நீங்க தயாரிச்சா நல்லா இருக்கும்'' என்று பிட்டைப் போட, அம்மா கட்சிக்காரர்கள் ராமராஜனைப் பார்த்துத் தலை தெறிக்க ஓடுகிறார்களாம். பாட்டுப் பாடியே பாலைக் கறந்தவரு, சான்ஸைக் கறக்க முடியலையே அப்பு!

• ஓவியாவும் விஷ்ணுவும் 'பட்டையைக் கிளப்பு பாண்டியா’ படத்தில் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள். 'ஓவியாவுடன் நடிப்பது என்றால் சம்பளம் குறைவு என்றாலும் கவலையில்லை. என் நீண்ட நாள் கனவு’ என ஓவியா புகழ் பாடி வருகிறார் விஷ்ணு. ஓவியாவுக்கேவா?

• தொடர்ச்சியாக ரவி தேஜாவுக்குத் தெலுங்கில் படங்கள் ஃப்ளாப் ஆக, 'பல்பு’ படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். ஸ்ருதிஹாசன், அஞ்சலி, கோபிசந்த் என பெரிய கூட்டத்துடன் களம் இறங்குகிறார். நகைச்சுவை படமாம். பல்பு வாங்காம இருந்தா சரி!

• இந்தி 'சாஸ்மி பதூர்’ படத்தில் டாப்ஸி ஹீரோவின் உதட்டோடு உதடு வைத்து முத்தக் காட்சியில் புரட்சி செய்துள்ளார். கவர்ச்சிக் காட்சியிலும் ரொம்பவும் தாராளமயமாக நடித்துள்ளார். தமிழில டப் பண்ணுவீங்களாப்பா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism