Published:Updated:

ரசிக மகா ஜனங்களே இன்னொரு ஸ்டாரும் கிளம்பிட்டாரு!

ரசிக மகா ஜனங்களே இன்னொரு ஸ்டாரும் கிளம்பிட்டாரு!

ரசிக மகா ஜனங்களே இன்னொரு ஸ்டாரும் கிளம்பிட்டாரு!

ரசிக மகா ஜனங்களே இன்னொரு ஸ்டாரும் கிளம்பிட்டாரு!

Published:Updated:

மிழ்நாட்டில் சோறுக்குப் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, ஸ்டாருக்குப் பஞ்சம் இல்லை. பவர் ஸ்டார் ரூட்டில் பஸ் பிடித்து பட்டிதொட்டி எல்லாம் டிங்கரிங் அடிக்கும் வெறியில் கிளம்பி வந்திருக்கிறார் இன்னொரு ஸ்டார்... வின் ஸ்டார் விஜி! (மனசைத் தேத்திக்குங்கப்பா!)

''என் 'எப்போதும் ராஜா’ பட பூஜை நடைபெறும் நாள் அன்று திட்டமிட்டே தன் 'ஜில்லா’ படத்துப் பூஜையை வைத்து என்னைக் காயப்படுத்திவிட்டார் விஜய். அனைத்து ஊடகங்களும் எனது பூஜைக்கு வந்துவிட்டார்கள். வந்த அனைத்து ஊடக நண்பர்களும் என்னிடம் 'இளையதளபதி பட பூஜைக்குப் போய்ட்டு வரலாமா?’ என்று கேட்டார்கள். எனது சக நடிகர் விஜயின் படத்திற்கு விளம்பரம் தேவை என்பதற்காக நானும் பெருந்தன்மையுடன் அனுப்பிவிட்டேன். இருந்தாலும் எனக்கு ஆந்திராவில் நகரியில் ரசிகர் மன்றம் திறந்திருக்கிறார்கள் என் ரசிகர்கள். ஆனால், விஜய்க்கு ஆந்திராவில் ரசிகர்கள் இல்லையே'' எனக் கடுப்புக் கொத்துப் பரோட்டா போட்டு, இருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் மெயில் தட்டிவிட்டிருந்தார் விஜி.... ஸாரி ஸாரி... வின் ஸ்டார் விஜி. சிக்குச்சுய்யா சிக்கன் என்று வின் ஸ்டாரிடம் பேசினேன்.  

ரசிக மகா ஜனங்களே இன்னொரு ஸ்டாரும் கிளம்பிட்டாரு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உங்களுக்கும் விஜய்க்கும் என்ன பிரச்னை?'' (முதல்ல விஜய்க்கு இவர் யாருன்னு தெரியுமா?)

''அவருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. நானும் அவரைப் போட்டியா நினைக்கலை (பார்ரா!). நான் பூஜை போடுறதுக்காக பக்காவா சிவராத்திரினு பிளான் பண்ணி ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணி வெச்சிருந்தேன். ஆனா, அன்னிக்குனு பார்த்து நம்ம விஜய் அவரோட 'ஜில்லா’ பூஜையை வெச்சுட்டார். அதான் கோபம்.''  

''ஏற்கெனவே பவர் ஸ்டார், சோலார் ஸ்டார்னு கூட்டம் கூட்டமா எங்க மேல டார்ச்சர் டார்ச் லைட் அடிக்கிறாங்க. இதில் நீங்க வேறயா?''

''பவர் ஸ்டார், சோலார் ஸ்டார்கூடல்லாம் என்னைக் கம்பேர் பண்ணாதீங்க. நான் 15 வருஷமா சினிமா இன்டஸ்ட்ரிலதான் இருக்கேன். ஆனா, ஒருத்தரும் என் திறமையைக் கண்டுக்கலை. அதனாலதான் நானே களத்துல இறங்கிட்டேன். இந்தப் பட்டம் எனக்கு நானே வெச்சதில்ல. என் டைரக்டர் பால்கி எனக்கு செல்லமா வெச்சது. இனி வின் ஸ்டாரின் குரல் விண்ணுலகம் வரைக்கும் கேட்கும்''

ரசிக மகா ஜனங்களே இன்னொரு ஸ்டாரும் கிளம்பிட்டாரு!

''பாஸ்... பஞ்ச் டயலாக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரு படத்துலகூட உங்க முகத்தை இதுக்கு முந்திப் பார்த்த மாதிரி ஞாபகம் இல்லையே...? இதுல 15 வருஷம்னு வேற பீதியைக் கிளப்புறீங்க?''

''அதுதான் சார் விதிங்கிறது. 'கில்லி’ படத்துல நான் நடிச்சிருக்கேன். விஜய் கபடி ஆடும் போட்டியைப் பார்க்கும் கூட்டத்துல நானும் ஒருத்தனா நடிச்சிருக்கேன். விசில் அடிக்கிறது, எந்திருச்சு டான்ஸ் ஆடிக்கிட்டே கைதட்டுறதுனு என்னென்னவோ பண்ணி என் திறமையைக் காட்டி இருக்கேன். 'கில்லி’ படத்தை டி.வி.டி-யில பார்த்து, முடிஞ்சா என்னைக் கண்டுபிடிங்க!'' (நான் ஏன்யா நடுராத்திரி 12 மணிக்கு சுடுகாட்டுக்குப் போகணும்?)

''சரி, உங்க படத்தோட கதை என்ன பாஸ்?''

''அமெரிக்காவுக்குப் போய் செட்டில் ஆக ஆசைப்படும் இளைஞன் அதுக்காக என்னெவெல்லாம் தகிடுதத்தம் பன்ணுறான்னு கதை. படத்துல எனக்கு ரெண்டு ஜோடி. ஒரு ஹீரோயின் பேரு புவனா. சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாத பொண்ணு. இப்போதான் டென்த் எக்ஸாம் முடிச்சிருக்கு. (போச்சு!) இன்னொரு ஹீரோயின் பேரு வாணி. கதைப்படி நான் புவனாவை உயிருக்குயிரா காதலிப்பேன். ஆனா, அமெரிக்கால இருந்து பாட்டு ஆராய்ச்சி (அடப்பாவி!) பண்றதுக்காக வர்ற பொண்ணுதான் வாணி. அமெரிக்கா ஆசையில அலையுற நான், வாணியை கரெக்ட் பண்ணி அப்படியே அமெரிக்கா போய் செட்டில் ஆகிடலாம்னு பிளான் பண்ணி புவனாவை விட்டுட்டு வாணிக்கு நூல் விடுவேன். என் காதல் என்னவானது? என் லட்சியம் என்னவானதுனு கதை காமெடியா டிராவல் ஆகும். க்ளைமாக்ஸ்ல அமெரிக்கால ஒரு ட்விஸ்ட் இருக்கு. அமெரிக்காவில் ராஜா. எங்கேயும் ராஜா பார்ட் 2 அமெரிக்காவுல எடுக்கப்போறேன். (கமல் சார் மன்னிச்சூ!)

படத்தோட பட்ஜெட் 75 லட்சம். சொந்தக் காசுதான். கள்ளக்குறிச்சி பக்கத்துல செந்தாரப்பட்டி என் ஊரு. முருகதாஸ் என் ஊர்க்காரர்தான். இப்போ போன் பண்ணினா, 'பிஸியா இருக்கேன்பா’னு சொல்லி அவாய்ட் பண்றாரு. சின்ன ஆளுன்னு நினைச்சவங்களுக்கு இந்தப் படத்தின் மூலமா பதில் சொல்லி இருக்கேன்.''

''ஒரு முடிவோடதான் கிளம்பி இருப்பீங்க போல..?''

''இது முடிவல்ல... ஆரம்பம் சார்!''

அவ்வ்வ்வ்வ்!

-ஆர்.சரண்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism