'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.மணிகண்டன் 'பட்டணத்தில் பூதம்’ படத்தை ரீமேக் செய்கிறார். பவர் ஸ்டார்தான் அதில் பூதமாக நடிக்கப்போகிறார் என்று செய்திகள் பரவ, 'என்ன சார் நடக்குது இங்க?’ என்று கேட்டேன்.

''ஐயய்யோ... அது வதந்திங்க. ஆனா, அடுத்த படமும் பவர் ஸ்டாரோடுதான். பவர் ஸ்டாரும் மிர்ச்சி சிவாவும் நடிக்கிற படம். இன்னும் டைட்டில் முடிவு பண்ணலை.''

''இப்படிப் பொசுக்குனு சொல்லிட்டா, நான் எப்படி பேட்டி எடுக்கிறது? சரி, நிஜமாவே நீங்க லட்டு சாப்பிட்டிருக்கீங்களா? இதுவரைக்கும் மொத்தம் எத்தனை லட்டு சாப்பிட்டு இருக்கீங்க?''

''ஆமாம்... நீங்க, திராட்சை, முந்திரி எல்லாம் போட்டு உருண்டையா இருக்கிற லட்டு பத்திதானே கேட்குறீங்க? சார், எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுங்கிறதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கேன்.''

''ஆமா, 'டல்’ திவ்யாவை எப்படி படத்தில 'தூள்’ திவ்யாவா மாத்துனீங்க?''

''அந்த சோப் யூஸ் பண்ணாங்க, அவங்களே மாறிட்டாங்க. ஆனால், நானும்தான் அந்த சோப் யூஸ் பண்றேன். பவர் ஸ்டார் மட்டும் தான் பக்கத்துல வர்றாரு.''

''ஒரே நேரத்துல டாம் க்ரூஸ¨ம் பவர் ஸ்டாரும் படம் பண்ணக் கூப்பிடுறாங்க, யாருக்குப் படம் பண்ணுவீங்க?''

''கண்டிப்பா எங்க பவர் ஸ்டாருக்குதான். ஏன்னா டாம் க்ரூஸ் பண்றதை டாம் க்ரூஸால பண்ண முடியும். ஆனால் டாம் க்ரூஸால பண்ண முடிஞ்சது, முடியாதது எல்லாத்தையும் எங்க பவர் ஸ்டார் பண்ணுவாரு.''

''ஓவரா பவர் ஸ்டார் புராணம் பாடுறீங்களே, ஏன் ஜே.கே. ரித்தீஷ் உங்களை இம்ப்ரெஸ் பண்ணலையா?''

''இல்லைங்க... இதுவரைக்கும் அவரை நான் போஸ்டர்லதான் விதவிதமாப் பார்த்துருக்கேன். ஆனால், அவர் படம் இன்னும் பார்த்தது இல்லை. அவரோட எந்தப் படம் நல்லா இருக்கும் பாஸ்?''

''ஷகிலா பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''அவங்க ஏன் நிறையப் படம் நடிக்கலையேன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.''

''ஓ நீங்களும் 'கண்ணா பிட்டு பார்க்க ஆசையா?’ சங்கம்தானா?''

''ஹலோ பிரதர். நான் சொன்னது சாதாரண படம்தாங்க... ஏன் இப்படி? ஆனா, அவங்க அப்படிப்பட்ட படம் நடிச்சாங்கன்னா, அதுக்கு மக்கள்தான் காரணம். அந்த மாதிரியான படங்கள் ஓடுனதால, அவங்க தொடர்ந்து நடிச்சாங்க. சரியாத்தான் பேசுறேனா?''

''எத்தனை நாளைக்குதான் ஒரு ஹீரோயினை நாலஞ்சு பேரு லவ் பண்ற டைப் படங்கள் வரும்?''

''சினிமான்னு ஒண்ணு இருக்கிறவரைக்கும் இது இருக்கும். யாருக்குமே தெரியாம நாம ஒரு பொண்ணை சைட் அடிப்போம். அதாவது அப்படி நினைச்சுக்கிட்டு இருப்போம். ஒருநாள் அதை ஃப்ரெண்ட்கிட்ட சொன்னா 'எது, அந்த 23-சி பஸ்ல வருமே, அந்தப் பொண்ணுதானே... அவ பேரு ஹேமாடா’னு கரெக்ட்டா புள்ளிவிவரத்தோட சொல்லுவான் ஃப்ரெண்ட். அதனால அவங்களை நிறுத்தச் சொல்லுங்க, நாங்களும் நிறுத்துறோம்.''

நிறுத்திக்கறோம்... இப்போதைக்குப் பேட்டியை!

- உ.அருண்குமார், படம்: பா.கார்த்திக்