Published:Updated:

சென்னைப் பெண்ணின் வாழ்க்கையில் ஒருநாள்!

அவள் டீன்ஸ்

சென்னைப் பெண்ணின் வாழ்க்கையில் ஒருநாள்!

அவள் டீன்ஸ்

Published:Updated:
##~##

லகிலேயே இந்தியாவில்தான் அதிகமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இதில் பெண்களின் பங்களிப்பு, ஆடல் பாடலுக்கு மட்டுமே என்பதுதான் காலகாலமாக நீடிக்கும் நிலை. இது, இப்போது மெள்ள மாறிக் கொண்டிருக் கிறது. திரையோடு என்றிருந்த பெண்கள், இப்போது... இயக்கம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என்று திரைக்குப் பின்னும் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில்... சென்னை, அண்ணா நகரில் உள்ள 'மாயன் அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாடிக்ஸ்’ (MAAC)  எனும் நிறுவனம், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இடம்பெறும் குறும்படங்களை ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் '48 மணி நேரத்தில் திரைக்கதையிலிருந்து திரைக்கு' (From script to screen in 48 hours) எனும் வகையிலான போட்டியை நடத்தியது இந்நிறுவனம். படத்துக்கான கருப்பொருள், 'மாநகர பெண்ணின் வாழ்க்கையில் ஒரு நாள்' (A day in the life of  a metro girl).  இதற்காக 48 மணி நேர கால அவகாசம் தரப்படும். இதற்குள் 90 விநாடி நேரம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றை எடுக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அணிக்கு மூன்று பேர் வீதம் மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றன. இந்த அணிகள் எடுத்த 8 குறும்படங்களும் 'MAAC அண்ணா நகர்’ என்கிற முகப்புத்தக பக்கத்தில் ஏற்றப்பட்டு, நேயர்களின் நேரடித் தேர்வுக்கு வைக்கப்பட்டது. அதில் அதிகப்படியான 'லைக்ஸ்' பெற்ற முதல் ஐந்து படங்கள் இறுதிக்கட்ட சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, நடுவர்களின் இறுதி முடிவுக்கு கொடுக்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்களான லஷ்மி ராமகிருஷ்ணன் (ஆரோகணம்), காயத்ரி (ஓரம் போ, வா குவாட்டர் கட்டிங்) மற்றும் பிரியா.வி (கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா) ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த குறும்படத்தை தேர்ந்தெடுத்தனர். வெற்றி பெற்றது... சென்னை எத்திராஜ் கல்லூரி அணியின் 'எவ்ரிதிங் ஐ வான்ட் டு பி' (Every thing I want to be)  எனும் படத்துக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாயும், கோப்பையும் வழங்கப்பட்டது.

சென்னைப் பெண்ணின் வாழ்க்கையில் ஒருநாள்!

பெண்களுக்கான இந்தக் குறும்படப் போட்டியை நடத்திய 'எம்ஏஏசி' நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் ரமேஷ், ''இந்தப் போட்டிக்கு பெண்களிடம் கிடைத்த வரவேற்பை பார்க்கும்போது, திரைப்படத் துறையில் ஆர்வம் இருக்கும் பெண்களுக்கு அதற்கான ஒரு சிறு வாய்ப்பை வழங்கிய மகிழ்ச்சி கிடைக்கிறது. எதிர்காலத்தில் திரைப்பட துறையில் சாதிக்கக் காத்திருக்கும் பெண்களுக்கு எங்கள் முயற்சி ஒரு படிக்கல்லாக அமையும் என நம்புகிறோம்!'' என்றார் பெருமிதமாக.

இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன், ''ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு  ஆண் விரும்புகிறாரோ, அப்படிப்பட்ட காட்சிகள்தான் நம் சினிமாவில் வருகின்றன. இதுவும் ஆணாதிக்கம்தான். இந்த நிலை மாற, பெண்கள் பெருமளவில் சினிமா துறைக்கு வர வேண்டும். அதுமட்டுமல்லாமல் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்... ஒரு சிறிய தவறு நடந்தாலும், அதை வெளிச்சம் போட்டு காட்டும் துறை மீடியா என்பதால், சினிமா என்பது பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான துறை'' என்றார்.

சென்னைப் பெண்ணின் வாழ்க்கையில் ஒருநாள்!

வெற்றி பெற்ற எத்திராஜ் கல்லூரி அணி மாணவிகளில் ஒருவரான திவ்யா பார்வதி, ''எங்க குழுவில் நான், ஜெ.திவ்யா, நகியானு மொத்தம் மூணு பேர். விஷ§வல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படிக்கிறோம். இந்த வெற்றி, எங்க கடின உழைப்புக்கான பலன். ஒரு இளம் பெண்ணோட வாழ்க்கையில், 'பியர் பிரஷர்'ங்கறது எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்துதுங்கறத மனசுல வெச்சுக்கிட்டு இந்த குறும்படத்தை எடுத்தோம்.

மெட்ரோ நகரங்களில் மற்றவர்கள் மாதிரி ஃபேஷனா உடை உடுத்தணும், விலை உயர்ந்த மொபைல் வாங்கணும், டூ வீலர் வாங்கணும்னு நமக்கான ஒவ்வொரு பொருளையுமே மத்தவங்களைப் பார்த்துதான் வாங்குறோம். அதனால நம்ம தகுதிக்கு மீறி, குடும்ப சூழ்நிலை மறந்து, அளவுக்கு அதிகமா செலவு செய்து கஷ்டங்களை தேடிக்கிறோம். ஆனா, நம்மோட தனித்துவத்தாலதான் மத்தவங்களை இம்ப்ரஸ் பண்ணணுமே தவிர, யார் யாரோ மாதிரி நம்மளையும் மாத்திக்கிட்டு அதை சாதிக்க நினைக்கக் கூடாதுங்கறதத்தான் படத்தில் சொல்லி இருக்கோம். பலரோட கருத்தையும் பிரதிபலிக்கிற மாதிரி இருந்ததால, வெற்றி எங்களுக்கு சாத்தியமாகியிருக்கு'' என்றவர்,

''எங்க மூணு பேரோட எதிர்காலமும் சினிமாதான். விஷ§வல் எஃபெக்ட்ஸ், அனிமேஷன்ல சாதிக்க ஆசைப்படுறோம்!'' என்றார் கண்கள் நிறைந்த கனவுகளுடன்!

- பி.செ.விஷ்ணு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism