Published:Updated:

ஜாக்கிசான் மகனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு?

ஜாக்கிசான் மகனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு?
ஜாக்கிசான் மகனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு?
ஜாக்கிசான் மகனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு?

பெய்ஜிங்: போதை பொருள் உபயோகிப்பதற்கு மற்றவர்களை அனுமதித்த குற்றத்திற்காக கைதாகியுள்ள நடிகர் ஜாக்கிசானின் மகனுக்கு 3 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சீன அதிகாரிகள் நடத்திய போதை பொருள் தடுப்பு வேட்டையில் ஜெய்சீசான் (31), மற்றும் தைவான் நாட்டு திரைப்பட நடிகர் கோ கய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவருக்கும் நடந்த சோதனையில் மரிஜுவானா என்ற போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அதனுடன் ஜெய்சீசான் வீட்டில் இருந்து 100 கிராம் அளவு போதை பொருள் கைப்பற்றப்பட்டது. அடுத்த சில நாட்களில் நடந்த இந்த சோதனையை அடுத்து இருவரையும் முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களிடம் சீன காவல்துறையினர் அனுமதி கோரினர்.

இதற்கு டாங்செங் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து முறைப்படி கைது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பினை சீனா வெய்போ வலைதளத்தில் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.  சீனாவில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை முறைப்படி கைது செய்ய வழக்கறிஞர்களின் ஒப்புதல் காவல்துறையினருக்கு தேவை. அதன்படி, ஜெய்சீசான் இன்று முறைப்படி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, போதை பொருள் உபயோகிப்பதற்கு மற்றவர்களை அனுமதித்த குற்றத்திற்காக கைதாகியுள்ள ஜெய்சீசான் உள்பட இவருக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது மகனின் போதை பொருள் பயன்பாட்டிற்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரியதுடன் அதிலிருந்து விடுபடுவதற்கு தனது மகனுக்கு உதவிகரமாக இருப்பேன் என்று நடிகர் ஜாக்கிசான் உறுதி அளித்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு போதை பொருள் எதிர்ப்பு தூதர் ஆக சீன அதிகாரிகளால் ஜாக்கிசான் அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.