Published:Updated:

நான் தியாகி அல்ல: கத்தி பட விழாவில் நடிகர் விஜய் ஆவேசம்!

Vikatan Correspondent
நான் தியாகி அல்ல: கத்தி பட விழாவில் நடிகர் விஜய் ஆவேசம்!
நான் தியாகி அல்ல: கத்தி பட விழாவில் நடிகர் விஜய் ஆவேசம்!

சென்னை: "நான் தியாகியும் அல்ல, துரோகியும் அல்ல" என்று ‘கத்தி’ பட விழாவில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார்.

நான் தியாகி அல்ல: கத்தி பட விழாவில் நடிகர் விஜய் ஆவேசம்!

விஜய்– சமந்தா நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ‘லைக்கா’ புரோடக் ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரண் தயாரித்துள்ள படம் ‘கத்தி’. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றிரவு நடந்தது.

விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், "நான் பொதுவாக என் படங்களை பற்றி பெரிதாக சொல்லி பழக்கமில்லை. எனக்கும், டைரக்டர் முருகதாசுக்கும் ‘கத்தி’ வாழ்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

‘கத்தி’ படம் எடுத்தது சண்டை போடுவதற்காக அல்ல. எல்லா தரப்பு மக்களும் சண்டை –சச்சரவுகளை மறந்து நிம்மதியாக– சந்தோஷமாக படத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்த படத்தை எடுக்கவில்லை. என்னை நான் தியாகி என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனால் சத்தியமாக நான் துரோகி கிடையாது. உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் தெளிவாகிவிடும். வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் உண்மையாகிவிடும். இது தமிழ்நாடு. நான் தமிழன்" என்று ஆவேசமாக பேசினார்.