Published:Updated:

ஃபைண்டிங் ஃபேனி - * காதலில் தோற்றவர்களின் கதை! *

Vikatan Correspondent
ஃபைண்டிங் ஃபேனி - * காதலில் தோற்றவர்களின் கதை! *
ஃபைண்டிங் ஃபேனி - * காதலில் தோற்றவர்களின் கதை! *

இந்தியாவின் பார்ட்டி நகரம் என்றழைக்கப்படும் கோவா. ஆனால் அதற்கான அடையாளம் சிறிதும் இன்றி அழகாக படமாக்கி இருக்கிறார்கள். படத்தின் தலைப்பிலேயே படத்தின் கதையை கூறிவிட்டார் இயக்குனர். கோவாவில் உள்ள ஒரு பழைய தபால் நிலையத்தில் பணிபுரியும் ஃபெட்ரிக் எனும் வயதான தாத்தாவின் இளம் வயது காதலியான ஃபேனியை தேடி செல்வது தான் கதை. இந்த பயணத்தில் தீபிகா படுகோன், அர்ஜுன் கபூர் ஆகியோரோடு இரண்டு பேர் இணைந்து பயணிப்பது இறுதியில் அந்த தாத்தா தன் காதலியை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை!

ஃபைண்டிங் ஃபேனி - * காதலில் தோற்றவர்களின் கதை! *படத்தின்  ஆரம்பத்தில் தீபிகா படுகோனும், அர்ஜூன் கபூரும் காதலர்கள் என அறிமுகப்படுத்தும் இயக்குனர் அதே காட்சியிலேயே தீபிகா தன் திருமண அழைப்பிதழை அர்ஜுனிடன் கொடுத்து அதிர்ச்சி ட்விஸ்ட் தருகிறார். அதற்கு அடுத்து நகரும் காட்சிகளில் திருமணம் ஆன முதல் நாளே திபீகாவின் கணவர் மணக்கோலத்திலேயே இறந்து விட தீபிகா படுகோன் தன் கணவரின் தாயுடன் கோவாவில் வசித்து வருகிறார். அதே ஊரில் உள்ள தபால்காரர் தான் ஃபெட்ரிக், அந்த ஊரில் யாருமே இல்லாத தன் குடும்பத்தின் பழைய  நினைவுகளோடும், காதல் தோல்வியோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அர்ஜுன் என கதை நகர்கிறது.

ஒரு நேரத்தில் அந்த தாத்தா தனியாக வீட்டில் புலம்பி கொண்டிருக்க அவர் போஸ்ட் செய்யாமல் விட்ட ஒரு கடிதத்தை தீபிகா படுகோன் படிக்க அவருக்கு கடைசி காலத்தில் ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து தன் பழைய காதலனான அர்ஜூனின் உதவியை நாடுகிறார். அர்ஜுனிடம் உள்ள ஓடாத பழைய காரை சரி செய்து பயணத்திற்கு கிளம்புகின்றனர்.

இதற்கிடையில் தீபிகா படுகோனின் மாமியார் காதாபத்திரத்தை விரும்பும் ஒரு ஓவியர் கதாப்பாத்திரம் மேடம்! வாட் எ வுமன் மேடம் என்று வசனம் பேசும் காட்சிகள் சிரிப்பலை அவரையும் சேர்த்து கொண்டு ஐந்து பேருடன் பயணிக்கிறது கார். ஃபெட்ரிக்கிடம் உள்ள முகவரியை தேடி செல்கின்றனர். இடையில் இயந்திர கோளாறு காரணமாக வண்டி பழுதாகி நிற்க! அந்த வேளையில் தனிமையாக பேசி கொண்டிருக்கும் வேளையில் அர்ஜுன் தீபிகா படுகோனை முத்தமிட கன்னத்தில் ஒரு அறைவிட்டு இது தவறு நான் உனக்கு வெறும் தோழி தான் என கோபப்படுகிறார். பின்னர் இருவருக்கு இடையே நடக்கும் காரசாரமான விவாதத்தின் இறுதியில் இருவர் மனதில் உள்ள காதலால் இருவரும் முத்தமிட்டு இணைகின்றனர்.

ஃபைண்டிங் ஃபேனி - * காதலில் தோற்றவர்களின் கதை! *இதேவேளையில் பெட்ரோலுக்காக நீண்ட தொலைவு பயணித்திருந்த தாத்தா காதாபாத்திரம் இவர்களை கஷ்ட்டப்படுத்த விரும்பாமல் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கிருந்து நகர்கின்றார். அதனை கண்டு வருத்தப்படும் அனைவரும் அர்ஜூனை குற்றம் சாட்டுகின்றனர். ஒரு வயதானவரை தவறவிட்டாயே உனக்கெல்லாம் அன்பு பாசம் என்றால் என்ன என்று தெரியாது என்று திட்டி தள்ளுகின்றனர். அர்ஜூன் கோவப்பட்டு தன் பக்கம் உள்ள நியாயங்களை கூறி மறுபடியும் ஃபெட்ரிக்கை தேடி பயணிக்கின்றனர்.

வரும் வழியில் அர்ஜூனின் பழைய துப்பாக்கி ஒன்று காரின் பழைய திற்க்கப்படாத பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட இதே சமயத்தில் தீபிகா படுகோனின் மாமியாரை அந்த ஓவியர் ஒரு வித்தியாசமான தொனியில் படம் வரைந்து கொடுத்திறுக்கிறார். அந்த துபாக்கியில் இருந்து விளையாட்டாக வெளிவந்த குண்டு ஓவியரை பதம் பார்க்க கண நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓவியர் வண்டியை விட்டு கீழே விழுந்து கடலில் மூழ்கி இறந்து விடுகிறார்.பரபரப்பான காட்சியில் கார் கட்டுப்பாட்டை இழந்து நிற்கும் இடத்தில் ஃபெட்ரிக் பேருந்திற்காக காத்திருக்க அவரை சேர்த்து கொண்டு அவரது காதலியின் வீட்டை அடைகின்றனர். அங்கு 25 வயதுடைய ஒரு பெண்ணிடம் ஓடி சென்று ஃபேனி என்கிறார் தாத்தா. அந்த பெண் நான் ஃபேனியை போன்றே உள்ள ஃபேனியின் மகள் என்றும், இது ஃபேனியின் இறுதி ஊர்வலம் ஃபேனி இறந்துவிட்டார் என்றும் கூறுகிறாள். அதுமட்டுமின்றி ஃபேனி 4 பேரை மணந்து சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் கூறுகிறாள்.

ஃபைண்டிங் ஃபேனி - * காதலில் தோற்றவர்களின் கதை! *மனமுடைந்த ஃபெட்ரிக் தாத்தாவிற்கு ஆறுதல் கூறுகின்றார்கள். இறுதியில் கணவனை இழந்த தீபிகாவின் மாமியாருக்கும், 43 வருடங்களாக காதலியை நம்பி ஏமாந்த  ஃபெட்ரிக்கிற்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான முதல் நாளிலேயே கணவனை இழந்த தீபிகா படுகோனுக்கும், தன் காதலிதத அர்ஜூன் கபூரோடு திருமணம் நடக்கிறது. தீபிகா படுகோனை கவர்ச்சியாகவும், அழகாகவும் காட்டி, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் அர்ஜூன் கபூரை காட்டி அழகான கிளாஸிக் படமாக கொடுத்திருக்கிரார் இயக்குனர். ஆக மொத்தத்தி ஃபிண்டிங் ஃபேனி காதலில் தோற்றவர்களின் வாழ்க்கை பயணம்!

ச.ஸ்ரீராம்