Published:Updated:

ஸ்ருதி.. அமலா பால்.. ஸ்ருதி.. !

ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து ' 3 ' என்ற தலைப்பில் படத்தை துவங்கினார். முதலில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ஸ்ருதி தன்னிடம் தேதிகள் இல்லை என்று தெரிவித்து அப்படத்தில் இருந்து விலகினார்

அடுத்து அமலாபாலிடம் பேசி அவரை ஒப்பந்தம் செய்தார்கள். முதலில் ஒப்பந்தம் ஆனவர் பின்பு செப்டம்பரில் தேதிகள் கேட்டதால், கால்ஷீட்  இல்லை என அமலா பாலும் விலகினார்.

இந்நிலையில் யாரை நாயகி ஆக்கலாம் என்று படக்குழு தீவிரமாக ஆலோசித்து வந்தது.  இப்போது மீண்டும் ஸ்ருதிஹாசனிடம் பேசி அவரை ஒப்பந்தம் செய்து விட்டார்கள்.

ரஜினியின் மகள் இயக்க, ரஜினியின் மருமகன் ஜோடியாக கமல் மகள் நடிக்க என மூன்று பேர் இணைய தயாராகிறது  ' 3 '.{iarelatednews articleid="994,992,991,990,989"}

அடுத்த கட்டுரைக்கு