Published:Updated:

சமந்தா

சமந்தா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்த சென்னைப் பொண்ணு. ' பாணா காத்தாடி' படத்தில் அறிமுகம் ஆன சமந்தா 'நான் ஈ' , 'நீதானே என் பொன்வசந்தம்' படங்களுக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகை ஆகிவிட்டார். தெலுங்கில் நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண்தேஜா, பவன் கல்யாண் என்று எல்லா ஸ்டார் நடிகர்களுடன் நடித்துக் கொண்டு இருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின். சித்தார்த்துடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர் காளஸ்திரி கோயிலுக்கு சென்று ராகு, கேது பூஜை செய்தார். ஆனால், சித்தார்த்தைக் காதலிப்பது குறித்து வெளிப்படையாக சமந்தா இதுவரை சொன்னதில்லை. ஹீமோபீலியா, தாலசஈமியாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக 'பிரதியுஷா' எனும் அமைப்பை நிறுவி, உதவிகள் செய்து வருகிறார். சமந்தாவின் நெருங்கிய தோழி காஜல் அகர்வால். இருவரும் 'பிருந்தாவனம்' தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு