Published:Updated:

லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த ரிலீஸ் 'நெருங்கி வா... முத்தமிடாதே..!'

லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த ரிலீஸ் 'நெருங்கி வா... முத்தமிடாதே..!'
லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த ரிலீஸ் 'நெருங்கி வா... முத்தமிடாதே..!'

லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த ரிலீஸ் 'நெருங்கி வா... முத்தமிடாதே..!'

டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை, இயக்குனர் என்று பல தளங்களிலும் இயங்கி வரும் மீடியா பெண், லஷ்மி ராமகிருஷ்ணன்.

தன் முதல் முத்திரைப் படமான ‘ஆரோகணம்’ தந்த ஊக்கத்தில், இப்போது இரண்டாவது படமான ‘நெருங்கி வா... முத்தமிடாதே’ ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார்.

‘‘நான் நடிச்ச முதல்படம்... ‘சக்கரமுத்து’ என்ற மலையாளப் படம். அப்போ என்னோட வயசு நாற்பதுக்கும் மேல. சின்ன வயசுல இருந்து சினிமா மேல ஆசை, அதனாலதான் இந்த இன்டஸ்டிரியில நுழைஞ்சேன்கிறதெல்லாம் இல்லை. அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியா சினிமா என்ன அழைச்சிக்கிடுச்சுனுதான் சொல்லுவேன்'' என்று ரொம்பவே ஃபிராங்க்காக சொல்லும் லஷ்மி ராமகிருஷ்ணன் தொடர்ந்தார்.

''தமிழில் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் சினேகாவின் அம்மாவா நான் முதல் என்ட்ரி ஆனேன். இப்போ 45 படங்கள்ல நடிச்சாச்சு. தமிழ் சினிமாவின் அம்மா நாற்காலிகளில் இப்போ எனக்கும் ஒண்ணு அழுத்தமா கிடைச்சிடுச்சு. இன்னொரு பக்கம், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பல தமிழ்க் குடும்பங்களுக்கும் நான் லவ்வபிள் நாட்டாமை!’’ என்று சிரித்தவரிடம்,

‘‘ஆனா இந்த நிகழ்ச்சி குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கே..?!’’ என்றதும் சீரியஸாகிறார்.

‘‘நான் ‘ஆரோகணம்’ படம் எடுத்துட்டு இருக்கும்போதே இந்த நிகழ்ச்சியை நடத்துறதுக்கான அழைப்பு வந்துச்சு. அந்த நேரம் என்னால போக முடியல. பட வேலைகளை எல்லாம் நேர்த்தியா முடிச்ச பிறகு, நிகழ்ச்சிப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். சமூக அக்கறையுள்ள ஒரு நிகழ்ச்சி அது. எல்லா விஷயங்களுக்கும் பாஸிட்டிவ், நெகட்டிவ்னு ரெண்டு ஃபீட்பேக்கும்தான் கிடைக்கும். எங்க குழுவுக்கு கிடைக்கிற எத்தனையோ பாராட்டுகள், நன்றிகள், நெகிழ்ச்சிகளுக்கு இடையில, யாரோ சிலர் சொல்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் முக்கியத்துவம் தர்றதில்லை!’’

லஷ்மி ராமகிருஷ்ணனின் அடுத்த ரிலீஸ் 'நெருங்கி வா... முத்தமிடாதே..!'

‘‘ஏன் எப்பவும் கீழ்தட்டு மக்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிறாங்க? மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இதுமாதிரியான பிரச்னைகளே இல்லையா... இல்ல நீங்க அப்படிப்பட்டவங்கள அணுக முடியலையா?’’

‘‘என்னங்க நீங்க... ஏதோ இந்த நிகழ்ச்சிக்கு வர்றவங்களை நாங்களா போய் கூட்டிட்டு வர்ற மாதிரி பேசறீங்க? எங்க ஆபீஸ் வந்து பாருங்க... தினம்தினம் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கணும்னு வந்து உட்கார்ந்திருப்பாங்க தெரியுமா? அவங்க எல்லாம், அத்தை, பெரியம்மா, அக்கானு நெருங்கிய சொந்தங்கள்கிட்ட தங்களோட கஷ்டத்தை பகிர்ந்துக்கிற மாதிரி என்கிட்ட பகிர்ந்துக்கிறாங்க. அவங்க விருப்பப்பட்டுதான் பேசுறாங்க, நாங்க நடக்கிறதைதான் சொல்றோம். இதை ஏன் தொலைக்காட்சியில காண்பிக்கிறோம்னா, இதே மாதிரி பிரச்னைகள் இருக்கும் வீடுகள்ல, இதை எப்படித் தீர்க்கிறதுனு தெரியாம தவிச்சிட்டு இருக்கிறவங்களுக்கு, இந்த நிகழ்ச்சி ஒரு கலங்கரைவிளக்கமா இருக்கும்!’’

‘‘நெருங்கி வா முத்தமிடாதே பற்றி சொல்லுங்க..?’’

‘‘புதுமுகம் ஷபீர், நாயகி பியா பாஜ்பாய், அம்பிகா, தம்பி ராமையா, ‘தலைவாசல்‘ விஜய்னு பலர் நடிச்சிருக்காங்க. இது ஒரு கமர்ஷியல் ஃபிலிம். நான்கு கதைகள் இதில் இருக்கு. நிச்சயமா வெற்றிபெறும். என்னோட மூன்றாவது படத்தை, டிசம்பரில் தொடங்க இருக்கேன்!’’

சூப்பர்!

-வே. கிருஷ்ணவேணி

அடுத்த கட்டுரைக்கு