. மெ.யின் ரோடு, முட்டுச் சந்து, காலேஜ் கிரவுண்ட் என யதார்த்த ஏரியாக்களே ஷூட்டிங் ஸ்பாட். சாதாரண முகங்களே கதாபாத்திரங்கள். காக்கா கரைச்சல், ஆட்டோவின் அதீத ஹாரன் என்று இயற்கை சத்தங்களே பின்னிசை. எளிமையாக இருந்தாலும் ரசிக்க, சிரிக்க, சிந்திக்கவைக்கின்றன குறும்படங்கள்!.
300 பக்க நாவல் ஏற்படுத்தாத பாதிப்பை மூன்றே வரிகளில் ஏற்படுத்தும் ஹைக்கூபோல, சுருக்கமாக, அழகாகக் கருத்து சொல்லும் குறும்படங்கள் இன்று ஆர்வமும் துடிப்பும் நிரம்பிய இளைஞர்களுக்கான வேட்டைப் பேட்டை!

பாலாவின் யதார்த்தம், கௌதமின் அழகியல், மிஷ்கினின் த்ரில்லர்கள் உருவாக்குவதற்கு இணையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் குறும்படங்களின் இயக்குநர்கள் கத்துக்குட்டி இளைஞர்கள் என்பது ஆச்சர்ய அதிசயம். யு டியூப் மூலம், சில நிமிட சொடுக்கல்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்து இழுத்து அங்கீகார அடையாளம் பெற்றுஇருக்கிறார்கள் பலர். குறும்படங்கள் என்றால் என்ன, பளிச் கவனம் ஈர்க்கும் குறும்படங்கள் உருவாக்க அத்தியாவசிய விதிகள் என்ன? விவாதிப்போம் வாருங்கள்!

10 ஆண்டுகளாகக் குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களுக்கு என்று 'நிழல்’ இதழை நடத்தி வரும் திருநாவுக்கரசு சின்ன முன்னோட்டம் தருகிறார். ''குறும்படம் என்பது குட்டி சினிமா இல்லை. சினிமா என்பது ஒரு நாவல் என்றால், குறும்படம் என்பது ஒரு சிறுகதை. பலர் ஆவணப் படத்தையும், குறும்படத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள். ஆவணப் படம் என்பது, சமூக வரலாற்றை அப்படியே பதிவு செய்வது. அதில் கற்பனைகளுக்கு இடம் இல்லை. நியூஸ் ரீல், விளையாட்டுச் செய்திகள், அறிவியல் செய்திகள், வரலாறு, பழங்கால வாழ்க்கை, கோயில்கள், பயண நிகழ்வுகள், டிஸ்கவரி சேனல் செய்திகள் அனைத்தும் ஆவணப் பட வகையில் வரும்.

குறும்படம் என்பது கிட்டத்தட்ட 'மைக்ரோ சினிமா’ வகையைச் சேர்ந்தது. கதையின் தன்மைக்கேற்ப நடிகர்களை நடிக்கவைப்பது. சினிமா போன்ற அதிகாரக் கட்டமைப்பு இல்லாமல், யாரும் எவரும் குறும்படம் இயக்கலாம். கையடக்க கேமரா, செல்போன் என நவீன சாதனங்கள் குறும்படம் உருவாக்குவதை இன்று எளிமையாக்கிவிட்டன. செல்போனில் படம் எடுத்து, இன்டர்நெட்டில் எடிட்டிங் சாஃப்ட்வேர் டவுன்லோடு செய்து, செலவே இல்லாமல் படத்தை முடித்துவிடலாம். இன்டர்நெட்டில் மைக் இணைத்து, டப்பிங்கையும் சுலபமாக முடிக்கலாம். உங்களுக்குள் இருக்கும் கற்பனைத் தாகத்துக்கு, குறும்படம் நிச்சயம் ஒரு தளமும் களமும் அமைத்துக் கொடுக்கும்!'' என்று நன்னம்பிக்கை விதைக்கிறார்.

அம்மா - வருங்கால மருமகள் இடையிலான உணர்வு நெருக்கம் உணர்த்திய 'மிட்டாய் வீடு’, குறும்பு கலாட்டாவாகக் 'காதலில் சொதப்புவது எப்படி?’ போன்ற குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜி, தன் அனுபவத்தில் இருந்து சில செய்திகள் சொல்கிறார். ''சினிமாவில் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டுக்கும் தனித்தனியே ஆட்கள் இருப்பார்கள். குறும்படத்தில் இயக்குநர்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய வேண்டும். முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை என்ன செய்யப்போகிறோம் என்பதை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, திட்ட மிட்டுச் செயல்பட வேண்டும்.

உங்கள் ஒளிப்பதிவாளரோடு நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்கள் கனவை திரையில் காட்சியாக்கும் பொறுப்பு அவருடையது. உங்களுடைய தேவை, அவருடைய சிரமம் என அனைத்தையும் பேசிப் பகிர்ந்து தெளிந்துகொண்டு, ஸ்பாட்டுக்குச் செல்லுங்கள்.

நடிப்பவர்களும் பல சமயம் சிரமம் கொடுப்பார்கள். கடைசி நேரத்தில் வர மறுத்துவிடுவார்கள். அதனால், 'ஸ்பேர் ஆக்டர்’களை எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். எந்த பந்தாவும் இல்லாமல், டீம் மெம்பர்களோடு இனிமையாகப் பழகுங்கள்.

தமிழகத்தில் இன்னும் தோண்டப்படாத சுரங்கமாகத்தான் குறும்படத் துறை இருக்கிறது. உற்சாகமாகக் களம் இறங்கி கலக்கியெடுங்கள்!'' என்று வாழ்த்துகிறார்.

குறும்படங்களில் கருத்து சொல்பவர்கள் படத்தின் ஒவ்வொரு நொடியையும் கவனமாக, சுவாரஸ்யமாக இருக்குமாறு காட்சிகளை அமைக்க வேண்டும். இல்லைஎன்றால், கருத்து சொல்லும்போது போர் அடிக்கும். ஒரு குறும்படத்தில் ஹீரோவைக் கொலை செய்யத் திட்டமிடுகிறது ஒரு கும்பல். அவரைக் கட்டிப் போட்டு பாம் வைக்கிறார்கள். மாடு ஒன்றை ஏவிவிடுகிறார்கள். அனைத்து முயற்சிகளில் இருந்தும் தப்பிக்கிறார் ஹீரோ. இறுதியில் ரொம்பவும் சிம்பிளாக அவர் கதையை முடிக்கிறார்கள். எப்படி? ஹீரோ பைக் ஓட்டிக்கொண்டு இருக்கும் சமயம், அவரது மொபைல் நம்பருக்கு அழைப்பு விடுக்கிறார்கள். பைக் ஓட்டிக்கொண்டே செல்போன் அழைப்பை அட்டென்ட் செய்யும் ஹீரோ, கவனம் சிதறி லாரி மோதிப் பலியாகிறார். 'டாக்கிங் வித் ரைடிங் கில்ஸ்’ என்கிற கருத்தோடு முடிகிறது அந்தக் குறும்படம். இதுபோல அறிவுரைகளையும் சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்தினால்தான் குறும்படங்கள் கவனம் ஈர்க்கும்.

'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் தனது 'நெஞ்சுக்கு நீதி’ குறும்படத்துக்காக தங்கப் பதக்கம் பெற்ற இயக்குநர் நலன், ''கதையை உருவாக்கும்போது, 'நல்லா இருக்கு, நல்லா இல்லை’ன்னு நேர்மையா விமர்சனம் பண்ற நண்பர்களை அருகில் வெச்சுக் கோங்க. அப்போதான் நம்ம ஸ்க்ரிப்ட்டுக்கு ரசிகர்கள் ஆதரவு எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்க முடியும். மக்களைக் கவனித்தல், உள்வாங்குதல், கலாசார வாழ்க்கையை, பின் புலத்தை அறிந்து படம் எடுத்தல். இதுவே குறும் படத்துக்கான அடிப்படை. படம் பார்த்துப் படம் எடுப் பதைவிட, மக்களைப் பார்த் துப் படம் எடுக்க வேண்டும். அதுதான் உண்மையான கலைப் படைப்பாக மக்களைச் சென்றடையும்!'' என்கிறார்.

'நாக்-அவுட்’ குறும்படத்தின் மூலம் பரவலாகக் கவனம் ஈர்த்தவர் எடிட்டர் பி.லெனின். ''கதை சொல்கிற உத்தியே குறும்படத்துக்குப் போதுமானது. தொழில்நுட்ப நேர்த்தி அதிகம் தேவை இல்லை. ஒரு குறும்படம் உணர்வுபூர்வமாக, எண்ணத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். குறும்படத்துக்கு இலக்கணமே இல்லை. எப்படியும் எடுக்கலாம். உங்கள் குறும்படத்துக்கு இசை தேவைப்பட்டால், படங்களில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். இசை இல்லா விட்டாலும், நன்றாக இருந்தால் உங்கள் படம் பேசப்படும். ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் செலவில் டிஜிட்டல், VHSல் கூடப் படம் எடுத்துப் போட்டிக்கு அனுப்பலாம். கருதான் முக்கியம். ஒரு நிமிடத்தில் இருந்து 75 நிமிடங்கள் வரைக்குள் அடங்கினால், அது ஒரு குறும்படம். 75 நிமிடங்களைத் தாண்டினால், அது சினிமா. நீங்கள் சொல்ல வந்த கருத்துக்களை மிகச் சில நிமிடங்களில் எளிமையாக, அழுத்தமாகச் சொல்லிவிடலாம்!'' என்கிறார் லெனின்.

'குறும்படத்தில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்பு எப்படி இருக்கிறது?’ 'மிட்டாய் வீடு’ குறும்பட நாயகன் அதீத் இப்போ 'தேநீர் விடுதி’ படத்தின் ஹீரோ. ''குறும்படம்தான் என் விசிட்டிங் கார்டு. 'இனிது இனிது’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். ஆனால், அந்தப் படத்தில் நடித்ததால் கிடைத்த பெயரைவிட, 'காதலில் சொதப்புவது எப்படி?’ குறும்படத்தில் நடித்ததால் கிடைத்த வெளிச்சம் அதிகம். நான் நடிச்ச குறும்படங்களைப் பார்த்துட்டுதான், 'தேநீர் விடுதி’ பட ஹீரோ வாய்ப்பு கிடைத்தது!'' என்று மகிழ்கிறார்.

'திற’ குறும்படம் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் பிரின்ஸ் என்னாரசு பெரியார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்த 1940-களில் எழுதப்பட்ட சிறுகதையை 2002 குஜராத் பிரச்னையைப் பின்புலமாகக்கொண்டு இவர் இயக்கிய குறும்படம்தான் 'திற’.

கலவரத்தில் காணாமல் போன மகளைத் தேடுகிறார் ஒரு முஸ்லிம் தந்தை. அந்தப் பெண்ணைப் பாதுகாக்க வேண்டிய இளைஞர்களே, அவளைச் சீரழித்திருக்கிறார்கள். மயங்கிய நிலையில் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். டாக்டர் அடைக்கப்பட்டு இருக்கும் ஜன்னலைப் பார்த்து, 'open it, open it’ என்கிறார். உடனே தன்னிச்சை பயத்துடன் அந்தப் பெண் பாவாடை நாடாவை அவிழ்க்கிறார். பொட்டில் அறையும் இதுபோன்ற கருத்துக்களைப் பளீரென்று பார்வையாளர்களுக்குப் புரியவைக்க, குறும்படங்கள் ஏதுவான களம் என்கிறார் பிரின்ஸ்

'வித் அவுட்’டாக சென்னைக்கு ரயில் ஏறி, கோடம்பாக்க வீதிகளில் அலைந்து திரிந்து, உப்புமா கம்பெனிகளில் ஆயுளைத் தேய்த்து... அதெல்லாம் அந்தக் காலம்!

நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே உங்கள் திறமையை உலகின் பார்வைக்குப் படைத்துவிட்டுக் காத்திருங்கள். உலகம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்!