Published:Updated:

இரண்டு நாட்களுக்கு 75 லட்சம்! - இது சன்னி லியோனின் சம்பளம்!

விகடன் விமர்சனக்குழு
இரண்டு நாட்களுக்கு 75 லட்சம்! -  இது சன்னி லியோனின் சம்பளம்!
இரண்டு நாட்களுக்கு 75 லட்சம்! - இது சன்னி லியோனின் சம்பளம்!

ளசுகளுக்கு சன்னி லியோனைத் தெரியவில்லை என்றால்தான் அபத்தம்! (தெரியாதவர்கள் தனியாக இருக்கும்போது கூகுளில் Sunny Leone என்று செர்ச் பண்ணிப் பார்ப்பீங்கதானே!) வெளிநாடுகளில் எப்படியோ, தமிழ்நாட்டில் ‘வடகறி’ சன்னி லியோன் என்றால் அவ்வளவு பிரசித்தம்.

இரண்டு நாட்களுக்கு 75 லட்சம்! -  இது சன்னி லியோனின் சம்பளம்!

ஐட்டம் டான்ஸ் என்னும் பெயருக்கு ஏற்ற நடை, உடை (?), பாவனைகள் கொண்ட சன்னி லியோன், ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி, போர்னோ படங்களில் நடித்ததை விட அதிகம் சம்பாதித்தார். ‘தமிழ்நாட்ல நமக்கு இவ்வளவு கிரேஸா’ என்று வியந்து போனவர், இப்போது ஆந்திரா பக்கமும் ஐட்டம் டான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.

தமிழில் மெகா ஹிட் அடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம், ‘கரன்ட் தீகா’ என்னும் பெயரில் தெலுங்கில் லேட்டஸ்டாக வெளிவந்திருக்கிறது. தமிழில் டீச்சர் வேடத்தில் பிந்து மாதவி நடித்த வேடத்தில், நம்ம ‘வடகறி’ சன்னி செம கவர்ச்சி டீச்சராக நடித்திருக்கிறார்.

‘வ.வா.ச’ தமிழ்ப் படத்தில் பிந்து மாதவிக்குப் பாடல் காட்சி கிடையாது. ஆனால், தெலுங்கில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் செட் போடப்பட்டு, ‘தேவதாஸ் ப்ரேக்-அப்’ என்னும் சன்னி லியோனின் கிளுகிளு பாடல் மூலம், இளசுகள் மத்தியில் ஷாக் அடித்திருக்கிறது ‘கரன்ட் தீகா’!

இரண்டு நாட்களுக்கு 75 லட்சம்! -  இது சன்னி லியோனின் சம்பளம்!

இந்தக் காட்சிக்கு சன்னியின் இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 75 லட்சம்! இதை அந்தப் படத்தின் ஹீரோ மஞ்சு மனோஜ், ஒரு தெலுங்கு பத்திரிகை பேட்டியின்போது, விதிகளை மீறி உளறிக் கொட்டிவிட்டார்.

இதில் தெலுங்கு நடிகைகள் அனைவரும், ‘நம்மகிட்ட இல்லாத என்னத்தை இவகிட்ட கண்டுட்டாங்க?’ என்று சன்னியின் மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம். முக்கியமாக, ‘கரன்ட் தீகா’ படத்தின் நாயகி ராகுல் ப்ரீத் சிங், ‘‘மாசக்கணக்குல ஷூட்டிங் போற எங்களுக்கே சம்பளம் 40 லட்சத்தைத் தாண்டலை. இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு இம்புட்டு பணமா?’’ என்று சன்னி மீது மிகவும் மனவருத்தத்தில் இருக்கிறாராம்.

 - தமிழ்