Published:Updated:

மீண்டும் கமல் கிரேஸி மோகன் கூட்டணி !

கமல், பிரபு, கிரேஸி மோகன் இந்த மூவர் கூட்டணி படம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' படம் தான்.  இப்படத்தை சரண் இயக்கி இருந்தார்.

இந்த மூவர் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறது. இப்படத்தை செய்யாறு ரவி இயக்க, சிவாஜி புரடெக்ஷன்ஸ் தயாரிக்க முன்வந்துள்ளது.

படத்திற்கு 'நண்பர்களும் 40 திருடர்களும்' என பெயரிட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இப்படம் துவங்க இருக்கிறது.

எப்போதுமே ஒரு படத்திற்கு இன்னொரு படத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி விட மாட்டார் கமல். 'தசாவதாரம்' வெளியீட்டிற்கு  நீண்ட நாட்கள் ஆனதால், அதற்குப் பிறகு  சீக்கிரம் ஒரு படத்தை முடித்து வெளியிட வேண்டும் என்று படபடவென படப்பிடிப்பை நடத்தி வெளியிட்ட படம் ' உன்னைப்போல் ஒருவன்'.

தற்போது 'விஸ்வரூபம்' படம் நீண்ட நாட்களாக துவங்காமல் இருந்தது, இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆகையால் 'விஸ்வரூபம்' வெளியாகி மூன்று மாத கால இடைவெளியில் அடுத்த படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் கமல். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த கதை தான் 'நண்பர்களும் 40 திருடர்களும்'.

'விஸ்வரூபம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே இப்படத்தின் மொத்த கதை மற்றும் திரைக்கதைக்காக பணியாற்றி வருகிறார்கள் படக்குழுவினர்.

அடுத்த கட்டுரைக்கு