Published:Updated:

காதலில் சொதுப்புவது எப்படி?

சித்தார்த், அமலா பால் இருவரும் புதிதாக ஒரு படத்தில் இணைந்து இருக்கிறார்கள். படத்திற்கு பெயர் 'காதலில் சொதப்புவது எப்படி?'.

கலைஞர் டி.வி.யில் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற குறும்படத்தை இயக்கி அனைவரது பாராட்டையும்  பெற்றார் இயக்குனர் பாலாஜி. அந்த குறும்படத்தை இப்போது வெள்ளித்திரைக்கு ஏற்றவாறு அதே பெயரில் இயக்க  இருக்கிறார்.

இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா.

இப்படத்தை தயாரிப்பது மட்டும் அல்லாமல் இப்படத்தின் ஒளிப்பதிவையும் நீரவ்ஷாவே மேற்கொள்ள உள்ளார்.

நீரவ்ஷாவுடன் இணைந்து 'தமிழ் படம்',' 'வ- குவாட்டர் கட்டிங்' போன்ற படங்களை தயாரித்த Y NOT STUDIOS இப்படத்தை  தயாரிக்க இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு