Published:Updated:

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

##~##

பாலிவுட்டில் இப்போது வளர்ந்துவரும் ஹீரோயின்கள் டீடெய்ல்ஸ்...

ஷ்ரத்தா கபூர்:  

'ஆஷிகி 2’ படத்தின் நாயகி. பாலிவுட்டில் மூன்று தலைமுறையினருக்கு வில்லனாக நடித்த நடிகர் சக்தி கபூரின் செல்ல மகள். நடித்தது மொத்தம் மூன்று படங்கள்தான் என்றாலும் டைம்ஸ் பத்திரிகை உலகளாவிய ஃபிகர்களைக் கொண்டு வெளியிட்டுள்ள '50 டிசைரபிள் விமென்’ பட்டியலில் 27-வது இடம் பிடித்திருக்கிறார். நடிப்பும் நன்றாக வருகிறது பொண்ணுக்கு!

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

 ஹியூமா குரேஸி:

தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஹியூமாவைப் பார்த்த அனுராக் காஷ்யப், ''உனக்கு எக்ஸ்பிரஷன்ஸ் நன்கு வருகிறது. வாய்ப்பு வரும்போது கூப்பிடுகிறேன்'' என்றவர்,  'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படத்தில் முக்கிய கேரக்டர் கொடுத்தார். இப்போ ஹியூமா அரை டஜன் படங்களில் பிஸி. அடுத்தடுத்த படங்களில் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ரோல்களைப் பொறுத்து இவரது கிராஃப் இருக்கும்!

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

நர்கீஸ் ஃபக்ரி:

பாகிஸ்தான் அப்பாவுக்கும் செக் அம்மாவுக் கும் பிறந்து நியூயார்க்கில் அடைகாத்து வளர்க்கப்பட்ட மெழுகுச் சிலை. 2011-ல் ரிலீஸ் ஆன மியூஸிக்கல் ஹிட்டான 'ராக் ஸ்டார்’ படத்தின் ஹீரோயினாக அறிமுக மானார். ரன்பீர் கபூருடன் லிப் லாக் காட்சி களில் நடித்து பாலிவுட்டையே கிறங்கடித்தார். அந்தப் படத்தின் பிரெஞ்சு கிஸ்ஸாலேயே 'ஐ.ஐ.எஃப்.ஏ’ விருதுகளில் 'ஹாட்டஸ்ட் ஃபேர் ஆஃப் தி இயர்’ ரன்பீருக்கும் இவருக் கும் சேர்த்துக் கொடுத்துக் கௌரவித்தது தனிக்கதை. ஜான் ஆபிரஹாமுடன் நடித்த 'மெட்ராஸ் கஃபே’ இப்போது ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. அதில் என்னென்ன 'கிஸ்’ வைத்திருக்கிறாரோ?

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

பிராச்சி தேசாய்:

இந்த குஜராத் குலாபி கேரியரை ஆரம்பித்தது டி.வி-யில். சீரியல் மூலமாகவே வடக்கை வளைத்துப் போட்டவர், 2008-ல் 'ராக் ஆன்’ என்ற ஹிட் படத்தில் அறிமுகமானார். 'லைஃப் பார்ட்னர்’, 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பை’, 'தேரி மேரி கஹானி’, 'போல் பச்சன்’ என ஓடிய படங்களில் எல்லாம் பிராச்சி இருந்ததால், ராசிக்கார நடிகை என்று பெயர். கே.எஸ்.ரவிக்குமாரின் 'போலீஸ்கிரி’யில் இவர்தான் ஹீரோயின்!

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

பூஷா குப்தா:

சமீபத்திய ரிலீஸான 'ஷார்ட் கட் ரோமியோ’, அதான் நம் ஊர் 'திருட்டுப் பயலே’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சோனியா அகர்வால் கேரக்டரில் நடித்த வர். அதற்கு முன் சயிஃப் அலிகானுடன்  'கோ கோவா கான்’ படத்தில் நடித்திருந் தார். 2007 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு டாப் டென்னில் இடம்பிடித்த அழகி. கொஞ்சம் இறங்கிக் கவர்ச்சி காட்டினால் பெரிய ஸ்டாராய் வருவார்!

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

பிரினித்தி சோப்ரா:

பிரியங்கா சோப்ராவின் உறவுப் பொண்ணு. 2011-ல் 'லேடீஸ் வெர்சஸ் ரிக்கி பால்’ படத்தில் நடிக்க வந்தார். முதல் படத்திலேயே ஃபிலிம்பேர் விருது. அடுத்த படம் 'இஸாக் ஜாதே’வும் அதிரிபுதிரி ஹிட். ஈகோ பார்க்காமல் பிரியங்காவே இவரின் கேரியரை டிஸைன் செய்வதாகவும் அவர்தான் ஹிட் படங்களை செலக்ட் செய்தார் என்றும் சொல்கிறார் பிரினித்தி. சூப்பர் கேர்ள்ஸ்!

புதுசாப் புறப்பட்ட தேவதைகள் !

- ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு