'காதல்ங்கிறது ஆழ் மனசுல அடிச்ச ஆணி மாதிரி’ - இந்த டயலாக்கை மறக்க முடியுமா? 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் 'பக்ஸ்’ கேரக்டரில் நடித்தவர் பகவதி பெருமாள். விரைவில் இயக்குநராகவிருப்பதால் ஸ்டோரி டிஸ்கஷனில் இருந்தவரை, வான்டட் ஆக இழுத்து வந்து 'கிச்சுக்கிச்சு’ மூட்டியதில்...

'' 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தோட உங்களையும் காணோமே சார்...?''

'' 'காக்க காக்க’, 'ஜில்லுனு ஒரு காதல்’ படங்கள்ல உதவி இயக்குநரா வொர்க் பண்ணிட்டு,

வெட்டியா இருந்த சமயத்துலதான் நடிக்கிற வாய்ப்பு வந்துச்சு. இப்போ எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி சாரோட சிறுகதையைப் படமாக்கலாம்னு புரொடியூசர்ஸ்கிட்ட பேசிட்டு இருக்கேன், அதனாலதான் நடிப்புக்கு கொஞ்சம் பிரேக். ஆனாலும், கிடைக்கிற கேப்புல ஏதாச்சும் நடிப்பேன். இப்போ 'ஜிகர்தண்டா’ படத்துல சின்ன கேரக்டர் பண்றேன். இன்னும் ரெண்டு மூணு படங்கள் பேசிட்டு இருக்காங்க. அதை ஒட்டுக்கேட்காம இருந்தீங்கனா, நானே சொல்றேன்.''

'' 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்துல உங்க நடிப்பைப் பார்த்து பொண்ணுங்கெல்லாம் பண்டல் பண்டலா லவ் லெட்டர்ஸை அனுப்பிவெச்சாங்களாமே... உண்மையா?''

''என்னைப் பத்தி யாரோ உங்ககிட்ட தப்பான புகாரைக் கொடுத்திருக்காங்க. சத்தியமா இதுவரை அந்த மாதிரி நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கலை. இன்னும் சிங்கிளா தான் சுத்திட்டிருக்கான் இந்த சிங்கம்.''

''நீங்கதான் இயக்குநராச்சே? நம்ம பிரதமர் மன்மோகன் சிங்கை வெச்சு ஒரு படம் இயக்கினா, எந்த மாதிரி கதையைத் தேர்ந்தெடுப்பீங்க?''

''அட... அவரை வெச்சுப் படம் பண்றதுக்கு சார்லி சாப்ளின் நடிச்ச ஆயிரம் மௌனப் படங்கள் இருக்கே. அதில் இருந்து ஒரு கதையை எடுத்தாப் போச்சு.''

''உங்களுக்குப் பொண்ணு பார்க்க போகும்போது, பொண்ணுகிட்ட பேசுவீங்களா?''

''பொண்ணுகிட்ட பேசுற தோட, அவங்க அம்மாகிட்டேயும் கண்டிப்பாப் பேசுவேன். இருங்க, இருங்க... எதுக்குன்னா, 'தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை’ன்னு சொல்லு வாங்கல்ல... அதுக்காகத் தான்.''

''சினிமாவுக்குப் போறேன்னு சொல்ற எல்லோரையுமே, அவங்க வீட்ல உள்ளவங்க வேற்றுக்கிரகவாசி மாதிரி பார்ப்பாங்களே... உங்க வீட்ல எப்படி?''

''என்னையெல்லாம் வேற்றுக்கிரக வாசி மாதிரிகூட பார்க்கல... அதுக்கும் கீழ பார்த்தாங்க. அண்ணன் அடிக்க வந்தான், அப்பா திட்டிக்கிட்டே இருப்பாரு, தம்பி மொறைச்சுப் பார்த்துட்டே போவான். ஆனா, எங்க அம்மா மட்டும்தான் ரொம்ப ஆறுதலா இருந்தாங்க. இப்ப அவங்க இல்லைன்னாலும், சினிமாவுல நான் இருக்கிறதுக்கு காரணம் அவங்கதான்!''

- கே.ஜி.மணிகண்டன்